வெங்கடேஷ் ஐயரின் நீண்ட வருட கனவை நனவாக்கினார் அண்டர்டேக்கர் – மகிழ்ச்சியின் உச்சியில் வெங்கடேஷ்

0
159
Venkatesh Iyer gets Signed Belt from Undertaker

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக மிக சிறப்பாக விளையாடி, அதன் மூலமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு வெங்கடேஷ் ஐயருக்கு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் மிக சிறப்பாக ஆடிய ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

26 வயதான இவர் டொமஸ்டிக் லெவல் கிரிக்கெட் போட்டிகளில் மத்தியபிரதேச அணிக்காக விளையாடியவர். இடது கையில் பேட்டிங் செய்து அதேசமயம் வலது கையில் மீடியம் வேகத்தில் பந்து வீசக் கூடிய திறமை பெற்ற ஆல்ரவுண்டர் வீரர் இவர். டி20 போட்டிகளில் 56 போட்டிகளில் விளையாடி 1285 ரன்களையும், 30 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தி இருக்கிறார்.

- Advertisement -

டி20 போட்டிகள் மட்டுமல்லாமல் பஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் ஃபார்மேட்டில் 10 போட்டிகளில் விளையாடி 545 ரன்களையும் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றுகிறார். அதேசமயம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் ஃபார்மேட்டில் இருபத்தி நான்கு போட்டிகளில் விளையாடி 849 ரன்களையும் 10 விக்கெட்டுகளையும் வெங்கடேஷ் கைப்பற்றியிருக்கிறார்.

சிறு வயதில் இருந்தே நான் அண்டர்டேக்கர் ரசிகன்

சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் சிறுவயதில் இருந்தே WWE பொழுதுபோக்கு நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பேன், அதில் வரும் அண்டர்டேக்கரை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவருடைய தீவிர ரசிகன் என்று குறிப்பிட்டுக் கூறி இருந்தார். மேலும் அவர் கையொப்பமிட்ட WWE பெல்ட் தனக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியிருந்தார்.

தற்பொழுது தனியார் கம்பெனி ஒன்று அவருக்கு அண்டர்டேக்கர் டீ ஷர்ட்டை அவருக்கு பரிசாக அளித்து உள்ளது. மேலும் WWE பெல்ட்டையும் கூடுதலாக அவரது கொடுத்துள்ளது. அந்த டீ ஷர்ட்டை அணிந்து, பெல்ட்டை தன்னுடைய தோள்பட்டையில் மாட்டிக்கொண்ட வாறு வெங்கடேஷ் ஐயர் புகைப்படத்தை எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஸ்டோரியாக பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

சமூக வலைத்தளத்தில் இந்திய ரசிகர்கள் அனைவரும் வெங்கடேஷ் ஐயரின் கனவை அண்டர்டேக்கர் எப்படியாவது நிறைவு செய்ய வேண்டும் என்று WWE பக்கங்களில், வேண்டுகோளாக தங்களுடைய கமெண்ட்டுகளை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.