வெங்கடேஷ் ஐயரின் அதிரடி சதத்தில் ஆட்டம் கண்ட மும்பை !

0
1379

2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தப் போட்டிகளில் இன்று 22 ஆவது ஆட்டம் மும்பை அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையே மும்பையில் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வெற்றி பெற்ற மும்பை அணி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டது கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களாக குர்பாஸ் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர்.

- Advertisement -

ஆட்டத்தின் துவக்கத்திலேயே கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது அந்த அணியின் துவக்க வீரரான ஜெகதீசன் இரண்டாவது ஓவரின் ஐந்தாவது பந்தியிலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். ஆனால் இவரது ஆட்டம் இழப்பு விதம் பற்றி சர்ச்சை எழுந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து மற்றொரு வீரரான குர்பாஸ் எட்டு ரண்களில் ஆட்டம் பிளந்தார் அதன் பிறகு வெங்கடேஷ் ஐயர் மற்றும் நித்திஷ்ரானா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். நித்திஷ்ரானா ஒரு முனையில் பொறுப்பாக ஆட மறுமுனையில் பட்டாசாக வானவேடிக்கை காட்டினார் வெங்கடேஷ் ஐயர்.

இவரது அதிரடியில் கொல்கத்தா அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது . எல்லா பந்துகளையும் பௌண்டரிகளுக்கும் சிக்ஸர்களுக்கும் விரட்டிய ஐயர் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார் . நித்திஷ் ராணா ஆட்டம் இழந்ததும் சார்துல் தாகூர் உடன் ஜோடி சேர்ந்தார் வெங்கடேஷ் ஐயர் . விக்கெட்டுகள் எதிர் முனையில் உணர்ந்து கொண்டிருந்தாலும் இவர் தனது அதிரடியை தொடர்ந்து ஆடினார் . மட்டையில் விழும் பந்துகள் எல்லாம் எல்லை கோட்டிற்கு அப்பால் ஆறு ரன்கள் ஆக சென்றன .

சிறப்பான ஆட்டத்தை கொடுத்த வெங்கடேஷ் ஐயர் ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் சதத்தை இன்று பதிவு செய்தார் . 49 பந்துகளில் ஒன்பது சிக்ஸர்கள் மற்றும் ஐந்து பவுண்டரிகள் உதவியுடன் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார் . 51 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார் வெங்கடேஷ் ஐயர் .

- Advertisement -

தற்போது வரை 18 ஓவர்கள் முடிவில் 165 ரண்களுக்கு ஐந்து விக்கெட் களை இழந்திருக்கிறது கொல்கத்தா அணி . இதில் 104 ரன்கள் வெங்கடேஷ் ஐயர் மட்டும் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது .