இந்த ஐபிஎல் தொடரில் தனது வெற்றியின் ரகசியம் என்ன? – தமிழக வீரர் வருன் சக்கரவர்த்தி பேட்டி !

0
178

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 16 வது சீசன் தற்போது பரபரப்பான கட்டத்தை ஏற்றி இருக்கிறது . ஒவ்வொரு போட்டியின் முடிவுகளும் புள்ளிகளின் பட்டியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன .

நேற்று நடைபெற்ற 53 வது போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின . இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . முதலில் ஆடிய பஞ்சாப் 181 ரன்கள் எடுத்தது .

- Advertisement -

கொல்கத்தா அணியில் கேப்டன் நிதிஷ் ரானா ரசல் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரின் அவ்வாறு ஆட்டத்தால் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை கைப்பற்றியது . இதன் மூலம் அந்த அணி 10 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது . மீதி இருக்கும் ஒன்று போட்டிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில் கொல்கத்தா அணிக்கான பிளே ஆப் வாய்ப்பு உறுதியாகும் .

நேற்று நடைபெற்ற போட்டியில் தமிழகத்தைச் சார்ந்த வருண் சக்கரவர்த்தி மிகச் சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார் . கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜித்தேஷ் சர்மா மற்றும் லியான் லிவிங்ஸ்டன் ஆகியோரது விக்கெட்டுகளை முக்கியமான நேரத்தில் கைப்பற்றி பஞ்சாப் அணியை 181 ரன்கள் கட்டுப்படுத்த உதவினார்.

இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான பங்களிப்பை கொல்கத்தா அணிக்காக கொடுத்து வருகிறார் சக்கரவர்த்தி . நேற்றைய போட்டிக்கு பின் இந்தத் தொடரில் தனது சிறப்பான பந்திவிச்சிக்கான காரணம் மற்றும் தனது திட்டங்களைப் பற்றி பேட்டியளித்தார் .

- Advertisement -

இதுகுறித்து பேசிய சக்கரவர்த்தி ” கடந்த போட்டியில் என் மீது முழு நம்பிக்கை வைத்து இறுதி ஓவராய் வீசும் பொறுப்பை எனக்கு கொடுத்தார் . மைதானத்தின் நீளமான பகுதியை பயன்படுத்தி அணி வெற்றி பெற உதவினேன் . இந்தப் போட்டி எங்களது ஹோம் கிரவுண்டில் விளையாடுவதால் சற்று சவாலானது . இங்கு இருக்கக்கூடிய பவுண்டரிகளின் எல்லை குறைவு மேலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளம் . ஆனால் என்னுடைய திட்டம் எளிதான ஒன்று” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” எந்த மைதானமாக இருந்தாலும் திட்டங்களை சரியாக செயல்படுத்துவது தான் வெற்றிக்கு வழிவகுக்கும் . அணியின் மூத்த வீரரான சுனில் நரேன் மிகப்பெரிய பலமாக இருந்து வருகிறார் . இந்தத் தொடரில் என்னுடைய திட்டங்கள் எப்போதுமே எளிமையாக வைத்திருக்கிறேன் . மேலும் என்னிடம் மூன்று வேரியேஷன்கள் இருக்கின்றன” என்று தெரிவித்தார் . இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் ஆடி இருக்கும் வருண் சக்கரவர்த்தி 17 விக்கெட் களை வீழ்த்தி இருக்கிறார் . அதிக விக்கெட் களை வீழ்த்தியவர்களுக்கான வீரர்களின் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது