ஐபிஎல் 2025

எங்கள் டெத் பவுலர் அவர்தான்.. ஆட்டத்தை கடைசி வரைக்கும் எடுத்துச் சென்று அவரிடம் விட்ருவோம் – வருண் சக்கரவர்த்தி பேட்டி

நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் வெற்றி குறித்து கொல்கத்தா அணியின் சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

கொல்கத்தா அணி வெற்றி

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆடுகளத்தின் சூழ்நிலையை புரிந்து கொண்டு தொடக்கத்தில் மெதுவாக விளையாடினாலும் அதற்கு பிறகு அதிரடியான ஆட்டத்தை விளையாடியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. இதில் கொல்கத்தா அணியின் ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் அதிகபட்சமாக 29 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய சன்ரைசர்ஸ் அணி தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாட ஆரம்பித்து தேவையில்லாமல் விக்கெட்டுகளை பறி கொடுத்தது. இதனால் 16.4 ஓவர்களிலேயே சன்ரைசர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் மட்டுமே குவித்தது. இதில் கொல்கத்தா அணியை பொருத்தவரை வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த சூழ்நிலையில் போட்டி குறித்து அவர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இவர்தான் எங்களின் டெத் பவுலர்

இதுகுறித்து வருண் விரிவாக கூறும்போது “இது ஒரு மிகச்சிறந்த இன்னிங்ஸாக எங்களுக்கு அமைந்துள்ளது. அன்கிரிஷ் ரகுவன்சி விளையாடிய விதம், வெங்கடேஷ் ஐயர் ஆட்டத்தை ஆழமாக எடுத்துச் சென்றது மற்றும் ரிங்கு சிங் முடித்த விதம் அருமையாக இருந்தது. மேலும் பந்துவீச்சில் வைபவ் அரோரா சிறப்பாக செயல்பட்டார். முதல் 10 ஓவர்களில் ஆட்டம் சமமாகவே இருந்தது. ஆனால் இதனை கைப்பற்ற முடியும் என்று நாங்கள் நினைத்தோம். நினைத்தவரே நடந்தது, ரகானே எங்களுக்கு கேப்டன் ஆக முதல் முறை செயல்படுகிறார். அவர் அதிகம் எங்களோடு விளையாடியதில்லை.

இதையும் படிங்க:எங்க திட்டம் எதுவுமே பலிக்கல.. இனி எதார்த்தத்தை புரிஞ்சுட்டு.. வெற்றி பெற இதைத்தான் செய்யணும் – பேட் கம்மின்ஸ் ஸ்பேட்டி

பந்துவீச்சை பொறுத்தவரை ரசல் எங்கள் அணிக்கு சிறந்த டெத் பௌலராக இருக்கிறார். நாங்கள் போட்டியை ஆழமாக எடுத்துச் சென்று இறுதியில் அவரிடம் விட்டுவிடுகிறோம். அவர்தான் எங்கள் அணியின் தற்போதைய டெத் பவுலராக திகழ்கிறார். மேலும் கிளாஸன் நடுவில் இருக்கும் போது எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் டி20 வடிவத்தில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். கடைசி இரண்டு நாட்கள் எங்களுக்கு சரியாக அமையவில்லை மிகவும் கடினமாக இருந்தது. கடைசி ஆட்டத்தில் நாங்கள் மோசமாக தோற்கடிக்கப்பட்டோம். முடிவு எப்படி இருப்பினும் நீங்கள் உங்கள் வேலையை செய்ய ஒருபோதும் தாமதிக்க கூடாது. இன்று எங்களுக்கு சரியான ஆட்டம் அமைந்துள்ளது எனவே இதை அப்படியே கட்டி எழுப்ப வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by