எங்க திட்டம் எதுவுமே பலிக்கல.. இனி எதார்த்தத்தை புரிஞ்சுட்டு.. வெற்றி பெற இதைத்தான் செய்யணும் – பேட் கம்மின்ஸ் ஸ்பேட்டி

0
1004

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 15ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்த சூழ்நிலையில் தோல்வி குறித்து சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சன்ரைசர்ஸ் படுதோல்வி

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி ஆடுகளத்தின் சூழ்நிலையை அறிந்து சன்ரைசர்ஸ் அணியின் பௌலிங்கை சிறப்பாக எதிர் கொண்டு விளையாடியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. அந்த அணியின் மிடில் வரிசை ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடி 29 பந்துகளை எதிர் கொண்டு 60 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி சன் ரைசர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட முயற்சித்த வீரர்கள் விரைவிலேயே ஆட்டம் இழந்து வெளியேற, கிளாஸன் மட்டும் அதிகபட்சமாக 21 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார். இதனால் சன்ரைசர்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அட்டாக்கிங் கிரிக்கெட் பலனளிக்கவில்லை

இந்த சூழ்நிலையில் தோல்வி குறித்து கேப்டன் கம்மின்ஸ் கூறும் போது “இது எங்களுக்கு சிறந்த நேரம் கிடையாது. இந்த ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு அருமையானதாக உள்ளது. ஃபீல்டிங்கில் அதிகமாக கோட்டை விட்டு இறுதியில் வீழ்ந்தோம். நாம் எதார்த்தமாக இருக்க வேண்டும். தொடர்ந்து அதிரடியாக ஆடும் முறை கடந்த மூன்று ஆட்டங்களாக பலன் அளிக்கவில்லை. எனவே அதற்கான மாற்று வழியை தேர்ந்தெடுக்க முடியுமா என்று திரும்பிப் பார்க்க வேண்டும். எங்கள் பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தை தொடங்கும் போது சிறப்பானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இறுதியில் முடிவு வேறு மாதிரியாக இருக்கிறது.

இதையும் படிங்க:ஐபிஎல் வரலாற்றில் கேகேஆர் சாதனை.. ஒரே அணிக்கு எதிராக 20வது வெற்றி.. 80 ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் படுதோல்வி

இந்த போட்டியில் நாங்கள் பீல்டிங்கில் அதிக தவறு செய்தோம். நாங்கள் சில கேட்ச் வாய்ப்புகளை முன்னதாகவே எடுத்திருக்க வேண்டும். ஆடம் ஜாம்பா விளையாடாததால் நாங்கள் மூன்று ஓவர்கள் மட்டுமே சுழற் பந்துவீச்சில் பயன்படுத்தினோம். அதற்கான தேவை இல்லாததால் நாங்கள் இந்த முடிவை செய்தோம். ஆனால் இப்போது அதைப் பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை. இனி அடுத்ததாக எங்களுக்கு நன்றாக தெரிந்த ஒரு இடத்திற்கு செல்கிறோம். அங்கு எங்கள் தவறுகளை சரி செய்ய வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -