புதிய ஐபிஎல் ரூல்.. ஒன்னு நல்லது இன்னொன்னு வேஸ்ட்.. வருண் சக்கரவர்த்தி ஷமிக்கு எதிரான கருத்து

0
355
Varun

நாளை துவங்க இருக்கும் 18ஆவது ஐபிஎல் சீசனில் இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய இரண்டு விதிகளை பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக கொண்டு வந்திருக்கிறது. இந்த இரண்டு விதிகளில் ஒரு விதி சுழல் பந்துவீச்சாளரான தனக்கு பயன்படும் என்றும் இன்னொரு விதி குறித்து தெரியவில்லை என்றும் வருண் சக்கரவர்த்தி கூறியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரில் போட்டித் தன்மையை அதிகரிப்பதற்காக சமீப ஆண்டுகளில் நிறைய புதிய விதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டு வருகிறது. இந்த வகையில் கொரோனா தொற்று காலத்தில் தடை செய்யப்பட்டிருந்த ஒரு விஷயத்திற்கு தற்போது அனுமதி கொடுத்ததுடன் கூடுதல் விதி ஒன்றையும் கொண்டு வந்திருக்கிறது.

- Advertisement -

பனிப்பொழிவின் தாக்கம் மற்றும் ரிவர்ஸ் ஸ்விங்

ஐபிஎல் போட்டிகள் இரவில் நடைபெறுகின்ற காரணத்தினால் பனிப்பொழிவு ஆட்டத்தின் வெற்றி தோல்வியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக இரவு போட்டியில் இரண்டாவதாக பந்து வீசும் பொழுது 10 ஓவருக்கு மேல் தேவைப்பட்டால் புதிய பந்தை பனிப்பொழிவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய விதியை கொண்டு வந்திருக்கிறது.

மேலும் கோவிட் காலத்தில் பந்துவீச்சாளர்கள் தங்கள் எச்சிலை பந்தை பளபளப்பாக்குவதற்கு பயன்படுத்தக்கூடாது என ஐசிசி தடையை விதித்தது. இதை இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரிலும் பின்பற்றியது. தற்பொழுது இந்த தடையை ஐபிஎல் தொடரில் இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்கி இருக்கிறது. இதன் மூலம் பந்தை எச்சில் மூலம் பளபளப்பாக்குவதால் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதை மீண்டும் கொண்டுவர வேண்டுமென முகமது ஷமி கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

புதிய பந்து தேவையானது

இதுகுறித்து வருண் சக்கரவர்த்தி பேசும் பொழுது “தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய விதிகளை பார்த்தேன். இதில் ஆட்டத்தின் இரண்டாம் பகுதியில் பத்து ஓவருக்கு மேல் புதிய பந்தை பயன்படுத்துவது தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் எச்சிலை பயன்படுத்துவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை. குறிப்பாக புதிய பந்து பயன்படுத்தும் நேரத்தில் சுழல் பந்துவீச்சாளர்கள் பந்த வீசுவார்கள். அந்த நேரத்தில் பனிப்பொழிவு இருந்தால் புதிய பந்தை அது பாதிக்காது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : ஆர்சிபிக்கு கடைசி இடம்தான் கிடைக்கும்.. வினோதமான இதுதான் காரணம் – கில்கிறிஸ்ட் பேச்சு

இதுகுறித்து முகமது சிராஜ் பேசும்பொழுது “தற்போது பந்தின் மீது எச்சிலை பயன்படுத்துவதற்கு தடையை நீக்கி இருப்பது நல்ல விஷயம். திரும்பவும் எங்களால் பந்தில் எதுவும் இல்லாதபோதும் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும். பந்தை பளபளப்பாக்க சட்டையில் தேய்ப்பதால் எதுவும் நடக்காது. அதே சமயத்தில் எச்சிலை பயன்படுத்துவது உதவி செய்யக் கூடியதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -