ஆர்சிபிக்கு கடைசி இடம்தான் கிடைக்கும்.. வினோதமான இதுதான் காரணம் – கில்கிறிஸ்ட் பேச்சு

0
104
Gilchrist

தற்போது 2025ஆம் ஆண்டு 18வது ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்கு கடைசி இடம்தான் கிடைக்கும் என்றும் அதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது என்றும் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு மெகா ஏலத்தில் ஆர்சிபி அணி நிர்வாகம் முடிந்தவரையில் சிறந்த வீரர்களை கொண்டு வருவதற்கு முயற்சிகள் செய்தது. அதே சமயத்தில் அந்த அணி நிர்வாகம் மொத்தமாக பேட்டிங் யூனிட்டில் இங்கிலாந்து வீரர்கள் பக்கமாக சாய்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆர்சிபிக்கு கடைசி இடம்தான் கிடைக்கும்

இதுகுறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் பேசும் பொழுது “நான் ஆர்சிபி மற்றும் அதன் ரசிகர்கள் விராட் கோலி யாருக்கும் எதிரானவன் கிடையாது. நான் இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்னை யாரும் தவறாக நினைக்க வேண்டாம். இந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு கடைசி இடம்தான் கிடைக்கும். காரணம் அந்த அணியில் நிறைய இங்கிலாந்து வீரர்கள் இருக்கிறார்கள்.

“ஆர்சிபி ரசிகர்கள் என் மீது கோபித்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் உங்கள் அணிக்கு வீரர்கள் வாங்கும் குழுவிடம்தான் இது சம்பந்தமாக கேட்க வேண்டும். அதிகப்படியான இங்கிலாந்து வீரர்கள் இருக்கின்ற காரணத்தினால் தான் ஆர்சிபி அணி கடைசி இடத்திற்கு தள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

டெல்லிக்குதான் கடைசி இடம்

இந்த நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்த முறை வலுவான அணியாக கருதப்படும் டெல்லி அணிதான் கடைசி இடத்தை பிடிக்கும் என மிகவும் ஆச்சரியமான ஒரு கருத்தை கூறி இருக்கிறார். இந்த முறை டெல்லி அணிக்கு பேட்டிங் யூனிட் மற்றும் பவுலிங் யூனிட்டில் வேகம் மற்றும் சுழல் என எல்லாமே மிகச் சிறப்பாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. சிஎஸ்கே, மும்பை கிடையாது.. இந்த 2 அணிகள் தான் பைனலுக்கு வரும்.. இந்திய வீரர் கணிப்பு

இதுகுறித்து மைக்கேல் வாகன் பேசும் பொழுது ” டெல்லிதான் இந்த முறை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்கும். ஏனென்றால் டெல்லியில் விளையாடுவதற்கு உயர்தரமான இந்திய பேட்ஸ்மேன்கள் தேவை. அவர்களிடம் பாப் டு பிளேசிஸ், ஜாக் பிரேசர் மெக்கர்க் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் போன்ற வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். கேஎல்.ராகுல், கருண் நாயர் மற்றும் அக்சர் படேல் பேட்டிங் யூனிட்டில் இருந்தாலும் கூட இது போதாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -