Uncategorized

ஆஸி இல்லை.. டி20 உகோ-ல் இந்திய அணிக்கு இவர்கள்தான் பெரிய தலைவலி.. சிறப்பு பலம் இருக்கு – வருண் ஆரோன் தகவல்

இந்திய அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் வருண் ஆரோன் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் எந்த அணி இந்திய அணிக்கு பெரிய சவாலாக இருக்கும்? என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கையில் வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை தொடர் துவங்க இருக்கிறது. இந்திய அணி அனைத்து போட்டிகளையும் தங்களது சொந்த மண்ணில் விளையாட இருக்கிறது. மேலும் முதல் போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிராக விளையாடுகிறது.

இந்திய அணியின் பலம்

தற்போது இந்திய அணியின் பலமாக பவுலிங் யூனிட்டை விட பேட்டிங் யூனிட் இருக்கிறது. இந்திய அணியில் தற்போது பிளேயிங் லெவனில் இடம்பெறக்கூடிய எல்லா வீரர்களுமே சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார்கள். சஞ்சு சாம்சன் மட்டுமே பின் தங்கி இருக்கிறார் ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது.

அதேசமயத்தில் பவுலிங் யூனிட்டும் நன்றாகவே இருக்கிறது. சிறப்பான வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்பின் மற்றும் பாஸ்ட் என இரண்டு பக்கங்களிலும் இருக்கிறார்கள். இதன் காரணமாக இந்த முறை இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரை தக்க வைக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இந்த நிலையில் வருண் ஆரோன் புதிய தகவல் ஒன்றை கூறி இருக்கிறார்.

- Advertisement -

இவர்கள் நெருக்கடி கொடுப்பார்கள்

இதுகுறித்து வருண் ஆரோன் பேசும் பொழுது ” நியூசிலாந்து இந்தியா அணிக்கு பெரிய சவாலை கொடுப்பார்கள். ஏனென்றால் அவர்களிடம் சுழல் பந்துவீச்சை விளையாடுவதற்கு சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். நீங்கள் இங்கு வந்தால் சுழல் பந்துவீச்சை சிறப்பாக விளையாட வேண்டும். மேலும் அவர்களுக்கு ஐபிஎல் மூலம் நல்ல அனுபவம் இருக்கிறது. நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கும் டேரில் மிட்சல் போன்றவர்கள் இருக்கிறார்கள்”

இதையும் படிங்க : சாம்சன் தான் வேணும் இஷான் வேண்டாம்.. நான் இந்த பிளேயிங் லெவனை தான் வைப்பேன் – யுஸ்வேந்திர சஹல் அதிரடி

“நியூசிலாந்தின் சிறப்பு என்னவென்றால் அவர்களுக்கு ஒருபோதும் விட்டுக் கொடுக்காத மனப்பான்மை இருக்கிறது. அவர்களால் போட்டியின் பின்னால் இருந்து வந்தும் வெற்றி பெற முடியும். மற்ற அணிகளை ஒப்பிடும் பொழுது அவர்களிடம் சூப்பர் ஸ்டார் வீரர்கள் இல்லை. ஆனாலும் அவர்கள் சிறப்பாக எல்லோரும் செயல்படுகிறார்கள். மேலும் அவர்களுக்கு சுழல் பந்துவீச்சு திறமையும் இருக்கிறது. பின்பகுதியில் ஆடுகளம் மெதுவாக மாறும் பொழுது மிட்சல் சான்ட்னர் தாக்கத்தை கொடுப்பார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Varun Aaron