14 வயதில் இந்திய வீரர் சாதனை.. இதுவே பாகிஸ்தானா இருந்தால் தூக்கி போட்டு இருப்பாங்க! முன்னாள் வீரர் சாடல்

0
26

லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியில் 14 வயது வீரரான வைபவ் சூர்யவம்சி அறிமுகமாகி முதல் பந்திலேயே சிக்சர் அடித்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் 20 பந்துகளில் 34 ரன்கள் அடித்திருந்தார். இதில் மூன்று பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.

வைபவ் சூரியவன்ஷியின் இந்த பேட்டிங் கூகுள் சிஇஓ வரை கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த நிலையில் வைபவ் சூர்யவன்சியை பாராட்டியுள்ள பாகிஸ்தான் வீரர் பாசித் அலி,  இது பாகிஸ்தானில் நடந்திருந்தால் அந்த வீரர் தூக்கி எறியப்பட்டு இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பாகிஸ்தான் தூக்கி போட்டிருக்கும்:

இது குறித்து பேசிய அவர் 14 வயது முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விட்டார். இது அந்த வீரர் முதல் பந்திலே சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து ஆட்டம் இழந்திருந்தால் என்ன நடந்திருக்கும். மக்கள் அவரை என்ன சொல்லி இருப்பார்கள்.

இதுவே பாகிஸ்தானாக இருந்திருந்தால் அந்த வீரரை தூக்கி எரிந்து இருப்பார்கள். ஆனால் இவ்வாறு தான் இளம் வீரர்கள் மீது நம்பிக்கையை வைக்க வேண்டும். இவ்வாறு நம்பிக்கையை நாம் செலுத்தினால், அது நிச்சயம் நமக்கு எதிர்காலத்தில் பயனளிக்கும் என்று பாகிஸ்தான் வீரர் பாசித் அலி பாராட்டி இருக்கிறார். இந்த நிலையில் வைபவ் சூரியவன்சியின் பயிற்சியாளர் மணிஷ் ஒஜா, வைபவ் தந்தையை பாராட்டிருக்கிறார்.

- Advertisement -

விலை நிலத்தை விற்ற தந்தை:

வைபவ் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காக அவருடைய தந்தை விலை நிலத்தை விற்று கிரிக்கெட்டுக்கு செலவு செய்ததாக கூறியுள்ளார். இதேபோன்று வைபவ் சூரியவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் ஏலத்தில் தேர்வு செய்திருக்கிறது.

இதையும் படிங்க: பார்டி, பெண்கள் என ரூட் மாறிய அபிசேக் சர்மா.. தடுத்து நிறுத்திய யுவராஜ் சிங்.. என்ன நடந்தது?

ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சி குழு தினமும் அவருக்கு மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துகளை எதிர் கொள்ள  சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஐபிஎல் தொடரின் வேகப்பந்துவீச்சாளர்களை வைபவால் எதிர்கொள்ள முடியும் என்று ராஜஸ்தான் அணி நம்பியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

- Advertisement -