நேற்று எல்எஸ்ஜி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வழக்கம் போல் அதிரடி காட்டிய வைபவ் சூரியவன்சி ஆட்டநாயகன் விருது வென்றார்.
முதலில் பேட்டிங் செய்த எல்எஸ்ஜி அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வைபவ் சூரியவன்சி 38 பந்துகளில் 93 ரன்கள் குவிக்க, அந்த அணி எளிதாக ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
என் திட்டம் இதுதான்
நேற்று வழக்கத்திற்கு மாறாக வைபவ் சூரியவன்சி மிகவும் மெதுவாக ஆரம்பித்தார். பிறகு படிப்படியாக வேகத்தை அதிகரித்து தன்னுடைய வழியில் அரைசதம் அடித்தார். மேலும் தன்னுடைய அரைசத கொண்டாட்டத்தில் ஏ எழுத்து போல குறியீடு வைத்து கொண்டாடினார்.
இது குறித்து பேசி உள்ள வைபவ் சூரியவன்சி “எங்கள் அணி முதலில் பத்து வீசும் பொழுது நான் வெளியில் இருந்து பார்க்க ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக தெரிந்தது. எனவே நான் ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக விளையாடி என்னை நிலைநிறுத்திக் கொண்டால் அணிக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தேன். என்னால் எப்பொழுது வேண்டுமானாலும் இரண்டு மூன்று பவுண்டரி சிக்ஸர்கள் அடிக்க முடியும் என்று தெரியும்”
இதுதான் காரணம்
“நான் இன்னும் நீண்ட காலம் விளையாட போகிறேன் என்பது எனக்கு தெரியும். மக்கள் என் குறித்து நிறைய பேச போகிறார்கள் என்பதும் தெரியும். எனவே நான் இதில் கவனம் செலுத்துவது இல்லை. என்னுடைய முழு கவனமும் என்னுடைய விளையாட்டில் மட்டுமே இருக்கிறது”
இதையும் படிங்க : முகமது ஷமியை இதனால்தான் நாங்க தேர்வு செய்யல.. அவர் அதுக்கு மட்டுமே சரிப்பட்டு வருவார் – இந்திய தேர்வு குழு தலைவர்
“நான் எல்லா போட்டியிலும் ஏதாவது கொண்டாட்டத்தில் வித்தியாசமாக செய்வேன். அதற்கு எந்த அர்த்தமும் கிடையாது. நேற்று நான் செய்த கொண்டாட்டத்திற்கும் எந்த அர்த்தமும் கிடையாது. இப்பொழுது நாங்கள் எங்களுடைய விளையாட்டை ரசித்து விளையாடுவது மட்டும்தான் நோக்கமாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






