முகமது ஷமியை இதனால்தான் நாங்க தேர்வு செய்யல.. அவர் அதுக்கு மட்டுமே சரிப்பட்டு வருவார் – இந்திய தேர்வு குழு தலைவர்

0
206

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நிறைவடைந்த பிறகு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் முன்னணி வீரர் இடம்பெறாதது குறித்து இந்திய தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்த பிறகு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.
இதில் முதலில் ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் அதற்குப் பிறகு மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. டெஸ்ட் தொடருக்கு சுப்மான் கில் கேப்டன் மற்றும் கேஎல் ராகுல் துணை கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல ஒரு நாள் தொடருக்கு கில் கேப்டன் ஆகவும், ஸ்ரேயாஸ் அய்யர் துணை கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில் அணியின் மூத்த வீரரான முகமது ஷமி இந்தத் தொடருக்கு நிராகரிக்கப்பட்டு இருக்கிறார். கடைசியாக ஒரு நாள் உலகக்கோப்பை தொடரில் காயமடைந்து வெளியேறிய அவர், அதற்கு பிறகு உள்ளூர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் இந்திய நிர்வாகம் அவரை தேர்வு செய்யவில்லை.

- Advertisement -

தற்போதும் அவரது பெயர் நிராகரிக்கப்பட்டு இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் அஜித் அகர்கர் கூறும்போது “எங்களுக்கு தெரிவிக்கப்பட்டவரை தற்போதைய நிலையில் அவரது உடல் நிலை அவரை டி20 போட்டிகளில் மட்டுமே விளையாட அனுமதிக்கிறது. இந்த ஆண்டில் அவர் ஒரு உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் எனக்கு கிடைத்த தகவலின் படி அவர் தற்போது டி20 தொடரில் விளையாடுவதற்கு மட்டுமே ஓரளவுக்கு தயாராக இருக்கிறார்.

இதனால் தேர்வு சமயத்தில் அவரைப்பற்றி எந்த விவாதமும் நடைபெறவில்லை” என்று பேசியிருக்கிறார். ஷமி இந்திய அணியில் தேர்வு செய்யப்படாத போது “கடந்த காலத்தில் அவரே நான் எப்படி விளையாடி வருகிறேன் என்று நீங்களே பார்த்திருக்கிறீர்கள் எனவே அஜித் அகர்க்கர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். எல்லாம் உங்கள் கண் முன்னாடியே இருக்கிறது என்று பேசி இருக்கிறார்” என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -