இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய U19 அணி முதலில் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அண்டர் 19 அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கிறது.
இந்த சூழலில் நான்காவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அண்டர் 19 அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே 14 பந்துகளை எதிர் கொண்டு வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அதிவேக சதம் அடித்து சாதனை:
மேலும் மறுமுனையில் சூறாவளி போல் சுழன்று சுழன்று அடித்த 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி இங்கிலாந்து பவுலிங்கை சிதறடித்தார். வைபவ் சூர்யவன்ஷி கட்டுப்படுத்த முடியாமல் இங்கிலாந்து பாவலர்கள் தடுமாறினர்.
ஏழு இமாலய சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடித்து 52 பந்துகளில் எல்லாம் சூரியவன்சி சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் அண்டர் 19 ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை சூரியவன்சி படைத்திருக்கின்றார். இதற்கு முன்பு பாகிஸ்தான் வீரர் கம்ரான் குலாம் 53 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.
143 ரன்கள் விளாசிய வைபவ்:
தற்போது அதனை சூரியவன்சி முறியடித்து இருக்கின்றார். தொடர்ந்து அதிரடி காட்டிய சூரியவன்சி 78 பந்துகளில் 143 ரன்கள் சேர்த்தார். இதில் 13 பவுண்டர்களும், 10 சிக்ஸர்களும் அடங்கும். தொடர்ந்து விஹான் மல்கோத்ரா அரை சதம் அடித்தார்.
இதையும் படிங்க: 2வது டெஸ்ட்.. சேவாக், முரளி விஜய்யின் சாதனையை முறியடித்த கேஎல் ராகுல்.. இந்திய அணிக்கு லேசான சரிவு
இதனால் 35 ஓவர் முடிவில் இந்திய அண்டர் 19 அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்திருக்கின்றது. முதல் ஒருநாள் போட்டியில் 48 ரன்களும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 45 ரன்களும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் 86 ரன்களையும் வைபவ் சூரியவன்ஷி அடித்து இருந்த நிலையில் தற்போது அபாரமாக விளையாடி சதம் அடித்திருக்கின்றார். வைபவ் சூர்யவன்சியின் ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு விரைவில் இந்திய சீனியர் அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.






