இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 371 ரன்கள் என்ற இலக்கை எளிதில் இங்கிலாந்து எட்டியதால் இம்முறை 500 ரன்களுக்கு மேல் கடைசி இன்னிங்ஸ்க்கு இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என இந்திய அணி வீரர்கள் விளையாடுகின்றனர்.
180 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா விளையாடியது. இதில் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆட முற்பட்டு 28 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் ராகுல் மற்றும் கருண் நாயர் ஆகியோர் நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
ராகுல் அபார ஆட்டம்:
64 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற ஸ்கோருடன் நான்காவது நாள் ஸ்கோரை தொடங்க இந்திய அணியில் ராகுல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தார்.மீண்டும் கருண் 26 ரன்களில் ஆட்டம் இழக்க ராகுல் மட்டும் பௌண்டரிகளை அடித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இந்த சூழலில் ராகுல் இங்கிலாந்து மண்ணில் ஐந்தாவது அரைசதத்தை அடித்து இருக்கின்றார். இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஐம்பது ரன்களுக்கு மேல் அடித்த வீரர்கள் பட்டியலில் ராகுல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
ராகுல் சாதனை:
10 முறை 50 ரன்கள் மேல் அடித்து கவாஸ்கர் முதல் இடத்திலும், ராகுல் இரண்டாவது இடத்திலும், விஜய் மெர்ச்சண்ட் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இதை போன்று சேனா நாடுகளில் அதிக முறை அதை சதம் அடித்த இந்திய தொடக்கவீரர் பட்டியலில் ராகுல் தற்போது சேவாக் மற்றும் முரளி விஜயை முறியடித்து இருக்கின்றார்.
இதையும் படிங்க: என்ன இப்ப இந்தியாவை தோற்கடிக்கதான் போறோம்.. இத செஞ்சாலே விழுந்துருவாங்க – புரூக் சவால் பேட்டி
ஷேவாக் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தலா 9 முறை 50 ரன்கள் அடித்துள்ள நிலையில், ராகுல் தற்போது பத்தாவது முறையாக 50 ரன்கள் கடந்துள்ளார். இந்த பட்டியலில் சுனில் கவாஸ்கர் 19 முறை எடுத்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இந்த சூழலில் ராகுல் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 55 ரன்கள் திரும்பினார். ஏற்கனவே கருண் நாயர் 26 ரன்களில் வெளியேற இந்திய அணி 126 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்தது. ராகுல் 2025 ஆம் ஆண்டில் மட்டும் நான்கு முறை கிளீன் போல்ட் ஆகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






