இந்திய கிரிக்கெட்

14 வயது வைபவ் சூரியவன்சிக்கு கிடைத்த கௌரவம்.. இந்திய கிரிக்கெட் எதிர்கால நகர்வு – வெளியான தகவல்

இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நட்சத்திர வீரராக பார்க்கப்படும் 14 வயதான வைபவ் சூரியவன்சிக்கு மிகப்பெரிய உள்நாட்டு கிரிக்கெட் கவுரவம் ஒன்று கிடைத்திருக்கிறது.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வெறும் 35 பந்தில் சதம் அடித்து, குறைந்த பந்துகளில் ஐபிஎல் தொடரில் சதம் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற மெகா சாதனையை படைத்தார். மேலும் குறைந்த வயதில் டி20 சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

அறிமுகமே பிரச்சனையானது

இந்த நிலையில் தன்னுடைய 12ஆவது வயதில் ரஞ்சி டிராபி தொடரில் பீகார் அணிக்காக வைபவ் சூரியவன்சி அறிமுகமானார். அப்பொழுது பீகார் கிரிக்கெட் சங்கம் இரண்டு பிரிவுகளாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வந்தது. இதன் காரணமாக அவரது அறிமுக ரஞ்சி தொடரே பிரச்சினையாக அமைந்தது.

மேலும் அவர் இதுவரையில் கிடைத்த வாய்ப்பில் வேறு நூறு ரன்கள் மட்டுமே ரஞ்சி தொடரில் எடுத்திருக்கிறார். அவரிடமிருந்து உள்நாட்டு சிவப்பு பந்து கிரிக்கெட்டில் பெரிய அளவில் எந்த ரன்களும் வரவில்லை. ஆனால் இந்த முறை ரஞ்சி தொடரில் பெரிய அளவில் ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மிகப்பெரிய கௌரவம்

இந்த நிலையில் பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ள பீகார் கிரிக்கெட் சங்கத்தில் இந்த ஆண்டு ரஞ்சி சீசன் பீகார் அணியின் துணை கேப்டனாக வைபவ் சூரியவன்சி நியமிக்கப்பட்டிருக்கிறார். 12 வயதில் உள்நாட்டு சிவப்பு பந்து கிரிக்கெட்டில் அறிமுகமாகி சாதனை படைத்த அவர் தன்னுடைய 14 வது வயதில் அதே அணிக்கு துணை கேப்டன் ஆனது மிகப்பெரிய கௌரவம் ஆகவும் சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : பாபர் கோலியை பார்த்தும் திருந்தல.. 34 மாசமா மோசடி.. மீடியா பின்னாடி ஒளிய வேணாம் – சல்மான் பட் விமர்சனம்

மேலும் தற்போது துணை கேப்டன் பொறுப்பு சிவப்பு பந்து வடிவத்தில் ரஞ்சித் தொடரில் கிடைத்திருப்பதால், எதிர்காலத்தில் இதன் அனுபவத்தால் ஐபிஎல் தொடரிலும் மேலும் இந்திய அணிக்கும் கேப்டன் பொறுப்பை வகிப்பதற்கு வாய்ப்பாக அமையும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதில் முதலில் அவர் ஏதாவது ஒரு ஐபிஎல் அணிக்கு இளம் கேப்டனாக அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.

- Advertisement -
Published by