புவனேஸ்வர் குமார் இந்திய அணிக்காக அதை செய்யவே இல்லை.. அவர் கனியை நோக்கி போகவே இல்லை – அஸ்வின் கருத்து

0
0

​நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

​கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலையிலும், ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக அபாரமாக பந்துவீசி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய புவனேஷ்வர் குமாருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரது இந்த கம் பேக் குறித்து அஸ்வின் பேசும்போது, அவர் எதையுமே திட்டமிட்டு செய்யவில்லை என்றும், தனது கடமையை சரியாக செய்ததால் தான் இந்த பலன் அவருக்கு கிடைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

​இதுகுறித்து அஸ்வின் பேசும்போது “புவனேஷ்வர் குமார் இந்திய அணிக்கு மீண்டும் கம் பேக் கொடுப்பது குறித்து யோசித்தார் என்றோ அல்லது திட்டமிட்டார் என்றோ நான் நினைக்கவில்லை. அவரது வெற்றியின் மந்திரமே அவர் தனது சொந்த பயணத்தில் சென்றதுதான்.”

“​அவர் அந்தந்த தருணத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார், மேலும் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக செயல்படுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார், அதைத்தான் அவர் செய்தார். தற்போது இந்திய அணிக்கு திரும்பியதன் மூலம் அவருக்கு கிடைத்திருக்கும் இந்த வெகுமதி அவரது வெற்றிக்கு கிடைத்த கனியாகும்.”

- Advertisement -

“​ஆனால் அவர் ஒருபோதும் இந்த கனியை தேடிச் செல்லவில்லை. அவர் தனது வேலையைச் செய்தார், இப்போது அவருக்கு அந்த வெற்றி கிடைத்துள்ளது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -