தற்போது பாகிஸ்தான் அணியின் மர்ம சுழல் பந்துவீச்சாளராக விளங்கிவரும் உஸ்மான் தாரிக் தான் கிரிக்கெட் விளையாடுவதற்கு மகேந்திர சிங் தோனி ஒரு காரணமாக இருந்தார் என்று கூறியிருக்கிறார்.
நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்ற போட்டி வழக்கம்போல் எதிர்பார்ப்பை உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்படுத்தி உள்ளது. அதே சமயத்தில் உஸ்மான் தாரிக் பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது ஒரு தனி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பெருகும் ஆதரவு
உஸ்மான் தாரிக் பந்துவீச்சு குறித்து இந்தியாவில் நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் சென்று கொண்டிருந்தன. இந்த நிலையில் இந்திய முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தைரியமாக உஸ்மான் தாரிக் பந்துவீச்சு சரியானதாக இருக்கிறது என்று தான் நம்புவதாக தெரிவித்து இருந்தார்.
இதற்கு அடுத்து தற்பொழுது ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் உஸ்மான் தாரிக் பந்துவீச்சு சரியாகவே இருக்கும் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் அவர் ஏற்கனவே இரண்டு முறை தன்னுடைய பந்துவீச்சு சந்தேகங்களை தீர்த்து வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தோனிதான் காரணம்
இந்த நிலையில் இது குறித்து உஸ்மான் தாரிக் பேசும்பொழுது ” 2016 ஆம் ஆண்டு நான் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தை பார்த்தேன். அதற்குப் பிறகுதான் என்னால் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடியும் என்கின்ற நம்பிக்கை பிறந்தது. நான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். எனக்கு அந்த படம் எனக்கு ஒரு ஊக்க சக்தியாக அமைந்தது”
இதையும் படிங்க : ஜிம்பாப்வே கூட தோத்துட்டோம்.. ஆனா 2023ல இந்தியாவுல உலக கோப்பையை ஜெயிச்சத மறக்காதீங்க – டிராவிஸ் ஹெட் பேச்சு
“நான் ஏற்கனவே பந்துவீச்சு குறித்த சந்தேகத்திற்கான பரிசோதனைகளில் இருந்து இரண்டு முறை விடுவிக்கப்பட்டிருக்கிறேன். ஆனாலும் தொடர்ந்து நான் என்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு போராடிக் கொண்டிருக்கிறேன். இருந்தபோதிலும் இது குறித்து நான் அதிகம் கவலைப்படுவதில்லை. இதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.






