“NO.4-ல மூளையை யூஸ் பண்ணனும்.. எனக்கு இது புரியவே இல்ல!” – ஸ்ரேயாஸ் மீது யுவராஜ் சிங் கடுமையான விமர்சனம்!

0
946
Yuvraj

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த, இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி, தற்போது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியை இந்திய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு 199 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து அசத்தினார்கள்.

- Advertisement -

ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் எதிர்பார்த்தது போல ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்ய சாதகமாக இல்லை. அதே சமயத்தில் இரண்டாவது பேட்டிங் செய்யும்பொழுது பனிப்பொழிவு குறிப்பிட்டு பந்துவீச்சை கடினப்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் இந்திய பந்துவீச்சாளர்களின் உழைப்பை வீணடிக்கும் வகையிலான வேலைகளை இந்திய டாப் ஆர்டர் இன்று செய்தது. மைதானத்திற்கு வந்திருந்த 30,000 மேற்பட்ட ரசிகர்களை உச்சகட்ட விரக்திக்கு கொண்டு சென்றார்கள்.

இந்திய அணி பேட் மூலம் ரன் கணக்கை துவங்கும் முன்பாக மூன்று விக்கெட்டுகளை இழந்தது. இஷான் கிஷான், ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மூன்று பேரும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி சென்றார்கள். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டாப் ஆர்டர் மூவர் இதுவே முதல் முறை என்கின்ற மோசமான சாதனையை படைத்தனர்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் நான்காவதாக பேட்டிங் செய்ய உள்ளே வந்த பொழுது இந்திய அணி இரண்டு ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்படியான நிலையில் வெளியே சென்ற பந்தை, நின்ற இடத்தில் இருந்து அடிக்க ஆசைப்பட்டு, டேவிட் வார்னர் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து, ஒட்டுமொத்த ஆதரவாளர்களையும் எரிச்சல் படுத்தினார்.

இதுகுறித்து தற்பொழுது ட்விட் செய்துள்ள இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் “நான்காம் இடத்தில் வரக்கூடிய எந்த பேட்ஸ்மேனும் அழுத்தத்தை உள்வாங்க வேண்டும். அணி தங்கள் இன்னிங்ஸை கட்டமைக்க முயலும் பொழுது நன்றாக சிந்திக்க வேண்டும். கேஎல்.ராகுல் ஏன் நான்காவதாக பேட்டிங் செய்ய வரவில்லை என்று எனக்கு இப்போதும் புரியவில்லை. அவர் பாகிஸ்தானுக்கு எதிராக நான்காம் இடத்தில் வந்து சதம் அடித்தும் அவரை அனுப்பவில்லை!” என்று பதிவு செய்திருக்கிறார்!