இன்று ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா டல்லாஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் தொடரை நடக்கும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் தொடரை நடத்தும் அமெரிக்க அணி அசத்தலாக விளையாடி கனடா அணியைத் தோற்கடித்தது!
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற அமெரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கனடா அணி எதிர்பார்த்ததை விட சிறப்பாக ஆரம்பித்தது. அந்த அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 43 ரன்கள் கிடைத்தது. அருண் ஜான்சன் 16 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் நவீன் தலிவால் 44 பந்தில் 61 ரன்கள் எடுத்தார்.
இதற்கு அடுத்து நிக்கோலஸ் கிர்டன் 31 பந்தில் 51 ரன், ஸ்ரேயாஸ் மோவ்வா 16 பந்தில் 32* ரன்கள் எடுத்தார். கனடா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. அமெரிக்கா பந்துவீச்சில் அலி கான், ஹர்மீத் சிங் மற்றும் கோரி ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்கா அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஸ்டீபன் டைலர் ரன் ஏதும் இல்லாமலும், இதற்கு அடுத்து மோனக் படேல் 16 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். அமெரிக்கா அணிக்கு எடுத்ததும் நெருக்கடி உருவானது.
இதற்கு அடுத்த ஜோடி சேர்ந்த ஆண்டறிஸ் கவுஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் அதிரடியாக விளையாடி அமெரிக்க அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்று விட்டார்கள். இருவருமே அரை சதம் அடித்தார்கள். ஆண்டறிஸ் கௌஸ் 46 பந்தில் 65 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 58 பந்தில் 131 ரன்கள் சேர்த்தது.
இதையும் படிங்க : அவருக்கு ஒரு சான்ஸ் கொடுக்க நினைச்சோம்.. ஆனா இன்னும் இந்த விஷயத்தை முடிவு பண்ணல – ரோகித் சர்மா பேட்டி
மேலும் இறுதி வரை களத்தில் இருந்த ஆரோன் ஜோன்ஸ் 40 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 94 ரன்கள் எடுத்து மிரட்டினார்.அமெரிக்க அணி 17.4ஓவரில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பெற்று அசத்தியது.