அவருக்கு ஒரு சான்ஸ் கொடுக்க நினைச்சோம்.. ஆனா இன்னும் இந்த விஷயத்தை முடிவு பண்ணல – ரோகித் சர்மா பேட்டி

0
612
Rohit

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி இன்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் விளையாடியது. அபாரமாக விளையாடிய இந்திய அணி இந்த போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்கொண்டு டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியா அணி எப்படி அணுக இருக்கிறது என்பது குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசியிருக்கிறார்.

இன்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு மூன்றாவது இடத்தில் பேட்டிங்கில் வந்த ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 32 பந்தில் 53 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்து ஹர்திக் பாண்டியா 23 பந்தில் 40 ரன்கள் எடுத்தார். இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பங்களாதேஷ் அணியால் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 20 ஓவர் களுக்கு 121 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியின் அனுபவ வீரர் மகமதுல்லா 28 பந்தில் 40 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் பந்துவீச்சில் அர்ஸ்தீப் ஆரம்பத்தில் சிறப்பாக பந்தை ஸ்விங் செய்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார். இதற்கு அடுத்து கடைசி ஓவரை வீசிய சிவம் துபே இரண்டு விக்கெட் கைப்பற்றினார். மேலும் சிராஜ், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல் மற்றும் பும்ரா நால்வரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா “விஷயங்கள் விரும்பியபடி நடந்ததில் மகிழ்ச்சி. நான் முன்பே சொன்னது போல கண்டிஷனுக்கு பழகுவது முக்கியம். புதிய இடம், புதிய மைதானம் மற்றும் ட்ராப் இன் பிட்ச் இவைகளுக்குப் பழகுவது முக்கியம். நாங்கள் இன்று நிலைமையை நன்றாக சமாளிப்போம். ரிஷப் பண்டுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என நினைத்து மூன்றாவது இடத்தில் அனுப்பினோம். போட்டிக்கு பேட்டிங் யூனிட் எதுவென்று இன்னும் முடிவு செய்யவில்லை.

இதையும் படிங்க : வெறும் 121 ரன் .. பண்ட் ஹர்திக் அசத்தல்.. பயிற்சி போட்டியில் பங்களாதேஷ் அணியை இந்தியா எளிதில் வென்றது

பந்து வீச்சாளர்களும் சிறப்பாகச் செயல்பட்டார்கள். அர்ஸ்தீப் சிங் பந்தை நன்றாக முன்னோக்கி ஸ்பின் செய்தார். மேலும் டெத் ஓவரிலும் சிறப்பாக செயல்பட்டார். அவர் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார் நல்ல திறமை இருக்கிறது. எங்களிடம் நல்ல 15 வீரர்கள் இருக்கிறார்கள். கண்டிஷன் என்ன? என்பதை பார்க்க வேண்டும். பின்பு எது சிறந்த அணியாக இருக்கும்? என்று முடிவு செய்ய வேண்டும்?” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -