தற்போது சிஎஸ்கே அணியில் காயமடைந்திருக்கும் விக்கெட் கீப்பிங் இளம் இந்திய பேட்ஸ்மேன் வன்ஸ் பேடிக்கு பதிலாக சாதனை வீரர் உர்வில் படேல் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் வன்ஸ் பேட்டி 55 லட்சம் ரூபாய்க்கு சிஎஸ்கே அணிக்கு வாங்கப்பட்டார். இவர் டெல்லி பிரிமியர் டி20 லீக்கில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக இருந்தார். இந்த நிலையில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக எதிர்பாராமல் காயமடைந்ததால் தற்போது தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
இந்திய உள்நாட்டு டி20 லீக் தொடரான சையத் முஸ்டாக் அலி தொடரில் குஜராத்தைச் சேர்ந்த 26 வயதான இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் உர்வில் படேல் திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 28 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்து சாதனை படைத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இதே தொடரில் உத்தரகாண்ட் அணிக்கு எதிராக 35 பந்தில் அதிரடி சதம் அடித்திருந்தார். ஒரே தொடரில் அதிவேகமாக இரண்டு டி20 சதங்களை அடித்திருந்தபொழுதும் கூட இவரை நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த ஐபிஎல் அணி நிர்வாகங்களும் வாங்க முன்வரவில்லை. இது அந்த நேரத்தில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமாக அமைந்திருந்தது.
தற்போது சிஎஸ்கே அணியின் இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் வன்ஸ் பேடி காயம் அடைந்திருக்கின்ற காரணத்தினால் உர்வில் படேலுக்கு சிஎஸ்கே அணியில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்னுக்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும் எஞ்சிருக்கும் ஒன்று போட்டிகளிலும் இவர் உடனடியாக சிஎஸ்கே அணிக்கு விளையாட முடிகின்ற சூழ்நிலையும் அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. முகமது ஷமி நாங்க நினைத்த மாதிரி பவுலிங் பண்ணல.. சன்ரைசர்ஸ் ஐதராபாத் பயிற்சியாளர் விட்டோரி சாடல்
தற்போது சிஎஸ்கே அணியில் அம்பதி ராயுடுவின் ரோலுக்கு ஆள் இல்லாததும், மேலும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தோனி சீக்கிரத்தில் ஓய்வு பெற்று விடுவார் என்பதாலும், உர்வில் படேல் சிஎஸ்கே அணியில் தொடர்ந்து விளையாடுவதற்கு அற்புதமான வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் மீதமிருக்கும் மூன்று போட்டியையும் இவர் பயன்படுத்திக்கொண்டு, திறமை இருப்பதை வெளிப்படுத்தி விட்டால், சிஎஸ்கே அணியில் பெரிய வாய்ப்புகள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது!