கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

கடைசி 7 போட்டிகளில் 0 வெற்றி.. நான் சொல்ற இதை மட்டும் பண்ணுங்க – ஜிம்பாப்வே தொடருக்கு முன் ஷ்ரேயாஸ் ஐயர் வீரர்களுக்கு அறிவுரை

இந்திய டி20 அணி கடந்த 7 போட்டிகளில் ஒரு வெற்றியையும் பதிவு செய்ய முடியாமல் தடுமாறி வரும் நிலையில், ஜிம்பாப்வே தொடருக்கு முன் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் வீரர்களுக்கு முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளார். குறிப்பாக இளம் வீரர்கள் தோல்வி பயத்தை மனதில் வைத்துக்கொண்டு விளையாடக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஜிம்பாப்வே தொடரில் பல வீரர்கள் முதல் முறையாக வெளிநாட்டு சூழலில் விளையாடுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டிய ஷ்ரேயாஸ், “எவ்வளவு சீக்கிரம் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்கிறோமோ, அவ்வளவு நல்ல முடிவுகளை பெற முடியும்” என்று கூறியுள்ளார். கடந்த போட்டிகளின் முடிவுகளை நினைத்து அழுத்தம் அடையாமல், தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தோல்வி பயம் இருந்தால் நம்மை காப்பாற்றவே விளையாடுவோம் – ஷ்ரேயாஸ்

“தோல்வியை நினைத்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அந்த எண்ணம் மனதில் இருந்தால், வீரர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ளும் வகையில்தான் விளையாடுவார்கள். பயம் இல்லாமல் விளையாடும்போது மட்டுமே நம்முடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்” என்று ஷ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.

வெளியில் இருந்து வரும் விமர்சனங்களை பற்றி அதிகமாக யோசிக்காமல், தற்போதைய தருணத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். “நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து சிறந்த கிரிக்கெட் விளையாடினால், அது அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்” என்று கேப்டன் கூறியுள்ளார்.

- Advertisement -

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு பிறகு நேரடியாக ஜிம்பாப்வே வந்துள்ளதால், குறுகிய காலத்தில் போட்டிக்கு தயாராக வேண்டிய சவாலை சந்திப்பதாகவும் ஷ்ரேயாஸ் குறிப்பிட்டுள்ளார். “நேற்று வந்தோம், இன்று பயிற்சி, நாளை போட்டி என அட்டவணை மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் இதுபோன்ற சூழ்நிலைகளில் சிறப்பாக செயல்பட்டால், அது வீரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை தரும்” என்றார்.

அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் தற்போது ஜிம்பாப்வே என வெளிநாட்டு தொடர்கள் வீரர்களுக்கு நல்ல அனுபவத்தை வழங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். முடிவுகள் சாதகமாக அமையவில்லை என்றாலும், அந்த தோல்விகள் அணியை இன்னும் நெருக்கமாக இணைத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் ஒரு அணியாக எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருவதாகவும் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Published by