ஐபிஎல் 2025.. முகமது ஷமி நாங்க நினைத்த மாதிரி பவுலிங் பண்ணல.. சன்ரைசர்ஸ் ஐதராபாத் பயிற்சியாளர் விட்டோரி சாடல்

0
18

கடந்த ஐபிஎல் சீசன்னில் இறுதி போட்டி வரை வந்த சன்ரைசர்ஸ் இம்முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது சன்ரைசர்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கடினமாக மாறிவிட்டது.

தற்போது புள்ளி பட்டியலில் சன்ரைசர்ஸ் அணி ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. 10 போட்டிகளில் விளையாடி வெறும் மூன்று வெற்றியை மட்டுமே தழுவி ஆறு புள்ளிகள் உடன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்கள். இதற்கு காரணம் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டுலுமே மோசமாக செயல்படுகிறது.

- Advertisement -

ஷமி சரியாக பந்துவீசவில்லை:

குறிப்பாக சன்ரைசர்ஸ் அணி 10 கோடி ரூபாய் கொடுத்து சமியை வாங்கியது. ஆனால் ஷமி வெறும் ஆறு விக்கெட்டுகளை மட்டுமே இந்த சீசனில் வீழ்த்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சன்ரைசர்ஸ் அணியில் தலைமை பயிற்சியாளர் விட்டோரி, முகமது சமிக்கு உடல் தகுதியில் எந்த ஒரு சிக்கலும் பிரச்சனையும் இல்லை.

அவர் கடுமையாக பயிற்சி செய்து வருகிறார். அவரால் முடிந்தவரை களத்தில் செயல்படுகிறார். இந்தத் தொடருக்கு முன்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் நல்ல முறையில் பந்து வீசினார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. கடந்த இரண்டு சீசன்களுக்கு முன்னாள் ஷமிதான் பர்பிள் நிற தொப்பியை வென்றிருந்தார். எனவே ஐபிஎல் தொடரில் அவர் எப்படி செயல்படுவார். அவரின் திறமை என்ன என்று நம் அனைவருக்குமே தெரியும்.

- Advertisement -

ஷமிக்கே எரிச்சலை தருகிறது:

ஆனால் இந்த சீசனில் அவரால் அதே போல் பந்து வீச முடியவில்லை. நாம் பார்த்தது போல் அவர் தொடர்ந்து ஒரே மாதிரி சிறப்பாக செயல்படவில்லை. இது அவருக்குமே எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும் நல்ல முறையில் பந்து வீசுவதற்காக அவர் கடுமையாக பயிற்சி செய்து வருகிறார் என்று விட்டோரி கூறியுள்ளார்.கடந்த 2023 ஐபிஎல் தொடரில் சமி 17 இன்னிங்ஸ்க்கு விளையாடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. தொடர்ந்து தடுமாறும் ரிஷப் பண்ட்.. நிக்கோலஸ் பூரானிடம் பொறுப்பை கொடுங்க.. ஆஸி. வீரர் கருத்து

இதன் மூலம் ஒரே சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. ஆனால் தற்போது ஷமி அதிக ரன்களை விட்டுக் கொடுத்து ஏமாற்றம் கண்டுள்ளார். குறிப்பாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு ஓவர்கள் வீசி சமி 74 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த இரண்டாவது வீரர் என்ற சோகமான சாதனையும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

- Advertisement -