கடந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அந்த சமயத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்து வரும் ஜேக்கப் பெத்தல் பில் சால்ட் விளையாடியதால் அவருக்கு போதிய போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டாம் பாதியில் சால்ட் இன் காயத்திற்கு பிறகு அவர் விளையாட ஆரம்பித்தார்.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அலைஸ்டார் குக், பெத்தல் விளையாட வாய்ப்பு இல்லை என்றால் அவர் சொந்த நாட்டிற்கு திரும்பி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகலாம் என்று பேசி இருந்தார். இந்த சூழ்நிலையில் அது குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கும் ஆர்சிபி அணியின் ஆலோசகர் தினேஷ் கார்த்திக், அப்படி சொந்த நாடு திரும்ப வேண்டும் என்றால் ஐபிஎல்லில் தனது பெயரை பதிவிடுவதற்கு முன்பே அவர் செல்ல வேண்டும் இன்று காரசாரமான கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “அவர் பெஞ்சில் சும்மா உட்கார்ந்திருக்கிறார் என்று சொல்கிறீர்கள். அவர் ஆர்சிபியின் ஒரு அங்கமாக இருந்து விளையாட முடிவு செய்திருக்கிறார். அவர் ஒரு அங்கமாக இருக்க தேர்ந்தெடுத்த ஒப்பந்தத்தை எப்படி அவமதிக்க முடியும்? அவர் பெஞ்சில் சும்மா உட்கார்ந்திருக்கிறார் என்பதற்காக அதை எப்படி அவமதிக்க முடியும்? அப்படி என்னை நீக்கினால் நான் வீட்டுக்கு செல்வேன் என ஒவ்வொரு வீரரும் முடிவு எடுத்தால் ஒரு அணியில் 11 வீரன் மட்டுமே விளையாடுவார்கள். அப்படி விளையாட கூடாது என்று முடிவு எடுத்தால் ஐபிஎல் தொடரில் உங்கள் பெயரை பதிவிடுவதற்கு முன்பே செல்லுங்கள். விளையாட வந்துவிட்டு என்னால் விளையாட முடியாது என்று சொல்ல முடியாது” என்று அவர் பேசி இருக்கிறார்.