அர்ஜுன் டெண்டுல்கருக்கு அவசர அழைப்பு ; பிசிசிஐ திடீர் முடிவு!

0
5504
Arjun

தற்பொழுது இந்தியாவில் மண்டலங்களுக்கு இடையே ஆன டெஸ்ட் கிரிக்கெட் தொடரான துலிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி இன்று துவங்குகிறது. இதில் மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்கள் பல பரிட்சை நடத்துகிறது!

இதே போல இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான மண்டலங்களுக்கு இடையே ஆன தொடராக தியோதர் டிராபி இருக்கிறது. தற்பொழுது நடந்து வரும் உள்நாட்டு தொடர்கள் முடிந்ததும் அடுத்து இந்தத் தொடர் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடரில் மயங்க் அகர்வால் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள தென் மண்டல அணியில் சச்சின் டெண்டுல்கர் மகனான வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அர்ஜுன் டெண்டுல்கர் பெயரும் இடம் பெற்று உள்ளது.

இந்தத் தொடருக்கான தென் மண்டல அணியில் கவரப்பா, வைசாக் விஜயகுமார், கௌதம் கிருஷ்ணப்பா ஆகியோருடன் சேர்ந்து அர்ஜுன் டெண்டுல்கர் பவுலிங் யூனிட்டை பலப்படுத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பை என்று நாம் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் இவர் தனது உள்நாட்டு கிரிக்கெட் வாழ்க்கையை கோவா அணிக்காக ஆரம்பித்து தொடர்ந்து அங்கு விளையாடி வருகிறார்.

- Advertisement -

மேலும் தன் தந்தையைப் போலவே அறிமுக ரஞ்சிப் போட்டியில் அபாரமான ஒரு சதம் அடித்து சாதனை படைத்திருந்தார். இந்த வருடம் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் அறிமுகமாகி இருந்தார்.

தேசிய கிரிக்கெட் அகாடமி ஆல் ரவுண்டர்களுக்கு சமீபத்தில் ஒரு முகாமை நடத்தியது. அந்த பயிற்சி முகாமில் இவரது பெயரும் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு இலங்கையில் நடைபெறும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணிகளும் இவரது பெயர் இடம் பெற்று இருந்தது. தற்பொழுது இந்தத் தொடரிலும் இவரிடம் பெற்று இருக்கிறார்.

பொதுவாக உலக கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களுக்கு மிகப்பெரிய பற்றாக்குறை நிலவும். ஏனென்றால் இந்த வகையில் இருந்து ஒரு ஆல் ரவுண்டர் உருவாகி வருவது என்பது கடினமான காரியம். இதற்கு மிக அதிகபட்ச திறமையும் வேண்டும், உழைப்பையும் கொடுக்க வேண்டும் என்பதால், இந்த முறையில் இருந்து ஆல் ரவுண்டர்கள் அதிகம் கிடைக்க மாட்டார்கள். தற்பொழுது அர்ஜுன் டெண்டுல்கர் கிடைத்திருப்பது இந்திய கிரிக்கெட் ஒரு நல்ல அறிகுறி.

தியோதர் டிராபிக்கான தென்மண்டல அணி ;

மயங்க் அகர்வால் (கேப்டன்), ரோஹன் குன்னும்மால் (துணை கேப்டன்), என்.ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் ராயாடு, கேபி அருண் கார்த்திக், தேவ்தத் படிக்கல், ரிக்கி புய் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், வி கவேரப்பா, வி வைஷாக், கௌசிக் வி, மோஹித் ரெட்கர், சிஜோமோன் ஜோசப், அர்ஜுன் டெண்டுல்கர், சாய் கிஷோர்.