ஐபிஎல் 2024 ஆரஞ்சு கேப்: கோலியை முந்திய ரியான் பராக்.. முதல் இடத்தில் தென்னாப்பிரிக்க வீரர்

0
244

ஐபிஎல் விளையாட்டு களம் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கி ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஆக்ரோசமாக மோதி வருகின்றன. இதில் தொடரின் முடிவில் அதிக ரன்கள் குவித்த வீரருக்கு ஆரஞ்சு நிறத்திலான தொப்பியும், அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரருக்கு ஊதா நிறத்தில் ஆனா தொப்பியும் வழங்கப்படும்.

தற்போது இந்த தொடரில் மொத்தம் ஒன்பது போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் அதிக ரன் எடுத்த வீரர்களின் பட்டியலில் தற்போது இந்திய ஜாம்பவான் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி நேற்று டெல்லி அணிக்கு எதிராக சம்பவம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரியான் பராக் இரண்டாவது இடத்தில் இணைகிறார். அவரைத் தொடர்ந்து முதலிடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் நீடிக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய விராட் கோலி சிறிது காலம் ஓய்வெடுத்து விட்டு ஐபிஎல் தொடருக்காக பெங்களூர் அணியில் இணைந்தார். தான் பங்கு பெற்ற முதல் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக 21 ரன்களை குவித்த விராட் கோலியின் மீது மெதுவாக ஆடுகிறார் என்று விமர்சனங்கள் எழுந்தது. அதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 49 பந்துகளில் 77 ரன்கள் குவித்து 11 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்களுடன் அதிக ரன் குவித்தவர்களின் பட்டியல் இரண்டாவது இடத்தில் இருந்தார்.

ஐபிஎல் 2024 ஆரஞ்சு கேப்

இந்த நிலையில் நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக் வெறும் 45 பந்துகளில் ஏழு பவுண்டரி, ஆறு சிக்ஸர்கள் என 85 ரன்கள் குவித்து டெல்லி அணியை சம்பவம் செய்தார். இதில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதிக ரன் குவித்தவர்களின் பட்டியில் விராட் கோலியைப் பின்னுக்கு தள்ளி தற்போது இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.

- Advertisement -

இரண்டு போட்டிகளில் விளையாடி 127 ரன்கள் குவித்த ரியன் பராக் இரண்டாவது இடத்திலும், விராட் கோலி 98 ரன்கள் குவித்து மூன்றாவது இடத்திலும் இருக்கிறார். ஆரஞ்சு கேப்புக்கான பட்டியலில் முதல் இடத்தில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் ஹென்றிக் கிளாசன் வகிக்கிறார். இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள கிளாஸன் 143 ரன்கள் குவித்துள்ளார்.

முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக 63 ரன்கள் குவித்துள்ள கிளாசன் இரண்டாவது போட்டியில் மும்பை அணிக்கு எதிராக 80 ரன்கள் குவித்திருக்கிறார். இவரது ஃபார்ம் இப்படியே தொடரும் பட்சத்தில் அதிக ரன்கள் குடித்தவர்களின் பட்டியலில் இவரே முதல் இடத்தில் நீடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. 97 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன் நான்காவது இடத்திலும், 95 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா தற்போது ஐந்தாவது இடத்திலும் நீடிக்கிறார்கள்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024: ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காமல் போக வாய்ப்புள்ள 5 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள்

மேலும் இந்தத் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர், டெல்லி அணியில் டேவிட் வார்னர்,சென்னை அணியில் ருத்ராஜ் மற்றும் ரட்ச்சின் ரவீந்திரா ஆகியோர் இந்தப் பட்டியலில் இனிமேல் இணைவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -