ஐபிஎல் 2024: ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காமல் போக வாய்ப்புள்ள 5 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள்

0
5216

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 9 போட்டிகள் நடந்துள்ள நிலையில் அனைத்து அணிகளும் அவர்களுக்கு தேவையான வீரர்களை வைத்து ஒரு போட்டியில் விளையாடி விட்டனர்.

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் அனைத்து இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களை ஈர்த்து மிகவும் பிரபலமாக உள்ளது. அனைத்து வெளிநாட்டு வீரர்களும் திறமையின் அடிப்படையிலேயே ஏலத்தில் எடுக்கப்படுகின்றனர். ஆனால் தற்போது நடந்து கொண்டிருக்கும் சீசனில் அவர்களுக்கு இன்னமும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இந்த சீசன் முழுவதுமே பென்ச்சில் உட்கார வேண்டிய நிலை இருக்கலாம். அந்த ஐந்து வீரர்களை பற்றி காண்போம்.

- Advertisement -

1.பரூக்கி: சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் பரூக்கி. ஏற்கனவே ஹைதராபாத் அணியில் நடராஜன் மற்றும் மார்க்கோ யான்சன் என இரண்டு இடதுகை தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். ஒரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரே எடுக்க வேண்டிய கட்டாயத்தால் பரூக்கிக்கு இந்த சீசன் முழுவதுமே வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.

2.மிட்சல் சான்ட்னர்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சாண்ட்னர் கடந்த சீசன்களாகவே அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை. மேலும் இந்த சீசனிலும் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் ஆகிய இடது கை சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பதால் இந்த சீசனிலும் அவருக்கு வாய்ப்பு இல்லாத சூழ்நிலையே உருவாகியுள்ளது.

3.ஆஸ்டன் டர்னர்: ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஆஸ்டன் டர்னர் லக்னோ சூப்பர் ஜெய்ன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இருப்பினும் லக்னோ அணிக்கு மிடில் ஆர்டர் வரிசையில் நிக்கோலஸ் பூரான் மற்றும் மார்க்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் இருப்பதால் இவருக்கு வாய்ப்பு கிடைப்பதும் அரிது. மேலும் தற்போது அந்த இரண்டு வீரர்களும் மிகச்சிறந்த பார்மில் உள்ளனர்.

- Advertisement -

4.நாதன் எல்லிஸ்: தற்போது பஞ்சாப் திங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆன நாதன் எல்லிஸ் இந்த சீசனில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமாக இருப்பதாகவே தெரிகிறது. ஏனெனில் இந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு கிறிஸ் வோக்ஸ் மற்றும் ரபாடா ஆகிய சிறந்த பந்துவீச்சாளர்கள் இருப்பதால் பஞ்சாப் அணி இவரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு இல்லாதது போல் தெரிகிறது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024: டீமில் 5 தமிழக வீரர்கள்.. குஜராத் டைட்டன்ஸின் வலிமையான உத்தேச பிளேயிங் லெவன்

5.டாம் கரண்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ள இவர், ஏற்கனவே அந்த இடத்தை கிலென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் மற்றும் கேப்டன் பாப் டு பிளஸ்சிஸ் ஆகிய மூன்று வெளிநாட்டு வீரர்கள் நிலையாக தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இதனால் நான்காவது வீரராக அல்ஜாரி ஜோசப் லாக்கி பெர்குஷன் ஆகியோரிடமே செல்ல அதிக வாய்ப்பு இருப்பதால் இவருக்கு இந்த சீசனில் விளையாட பெரிதும் வாய்ப்பு இல்லை.