“தோனி இருந்த வரைதான் இந்தியா.. இவங்க 2000ல இருந்த ஆஸ்திரேலியா கிடையாது!” – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் விமர்சனம்!

0
714
Dhoni

இந்தியா பாகிஸ்தான் அணிகள் கடந்த 10 வருடங்களாக தனிப்பட்ட முறையில் இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர்களில் அரசியல் காரணங்களால் விளையாடாமல் இருந்து வருகின்றன!

கிரிக்கெட் உலகில் இந்த இரு நாடுகள் விளையாடும் போட்டிக்குத்தான் மிகப்பெரிய சந்தை மதிப்பு இருக்கிறது. இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் தாண்டியும் உலக அளவில் இருக்கக்கூடிய கிரிக்கெட் ரசிகர்களும் இந்தியா பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டியை எதிர்பார்க்கிறார்கள்.

- Advertisement -

இந்த இரண்டு அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி உலகின் எந்த நாட்டு மைதானத்தில் நடந்தாலும், அதற்கான டிக்கெட்டுகள் உடனடியாக விற்று தீர்ந்து விடும். மேலும் மைதானத்தில் இருநாட்டு ரசிகர்களும் எப்படியும் வந்து சேர்ந்து விடுவார்கள். இப்படி எதிர்பார்ப்புகள் இருந்தும் இரு நாடுகளும் தனிப்பட்ட முறையில் அதிக போட்டிகளில் விளையாடாதது, இருநாட்டு ரசிகர்களுக்கும் பெரிய இழப்பாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த வருடம் ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பையில் குறைந்தபட்சம் மூன்று போட்டிகளிலும் அதிகபட்சம் ஐந்து போட்டிகளிலும் மோதிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பது ரசிகர்களை மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. உலகக் கோப்பை அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்க, அதற்கு முன்பாக ஆசியக் கோப்பை ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்க இருக்கிறது. இரண்டு அணிகளும் செப்டம்பர் இரண்டாம் தேதி மோதிக் கொள்கின்றன.

இந்த நிலையில் இரண்டு அணிகள் குறித்தும் பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கூறுகையில் ” இப்போது இரண்டு அணிகளுமே பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட முடியாது. இரண்டு அணிகளுமே 2000ஆம் ஆண்டு இருந்தது போன்ற ஆஸ்திரேலிய அணி கிடையாது. இவர்களால் எந்த சூழ்நிலையிலும் இருந்து வந்து வெற்றி பெற்று விட முடியாது. இரண்டு அணிகளும் புதிய வீரர்களைக் கொண்டும் பழைய வீரர்களை கொண்டும் வெற்றிபெற முயற்சிப்பார்கள். இவர்களுக்கு இந்த அணியை பிடிக்கவில்லை.

- Advertisement -

இரண்டு அணிகளும் போட்டி நடக்கும் நாட்களில் எதிரணிகளுக்கு அச்சுறுத்தல் தரக்கூடியவர்களாக இருக்கலாம். ஆனால் ஆஸ்திரேலியா அணி இவர்களைவிட பல மைல் முன்னே இருந்தது. அவர்கள் முதல் ஐந்து விக்கெட்டுகளை சீக்கிரத்தில் இழந்தாலும் கூட, 275 முதல் 300 ரன்கள் அவர்களால் கொண்டுவர முடியும். இது ஒரு ட்ரீம் யூனிட். ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் அப்படி கிடையாது.

இந்திய அணியின் பேட்டிங் தோனியின் தலைமையில்தான் பலமாக இருந்தது. இப்போதைக்கு அவர்கள் ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் பெரிய ரன்கள் எடுக்க வில்லை என்றால், அந்த அணி சிறந்த பந்து வீச்சு தாக்குதல் கொண்ட எதிரணிக்கு எதிராக தடுமாற வேண்டி இருக்கும். பாகிஸ்தான் அணியின் பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் அவர்கள் நல்ல பந்துவீச்சு தாக்குதலை வைத்திருக்கிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்!