ஆசிய கோப்பை இந்திய அணியில் அதிர்ஷ்டம் இல்லாது போன 5 வீரர்கள்!

0
418
Asia cup

தற்பொழுது ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் வரவேற்கவும் விமர்சிக்கவும் இடம் இருக்கவே செய்கிறது. அணியில் கட்டாயம் இடம் பெறுவார்கள் என்று நினைத்திருந்த சில வீரர்கள் அணியில் இடம்பெறாமல் போயிருக்கிறார்கள். சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது. இப்படி ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் அதிர்ஷ்டம் இல்லாது இடம் பிடிக்க முடியாமல் போன 5 வீரர்களை தான் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்க இருக்கிறோம்!

ஸ்ரேயாஸ் ஐயர்;

- Advertisement -

இந்த வருடத்தில் டி20 போட்டியில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இவர் தான் முதல் இடத்தில் இருக்கிறார். ஆனாலும் ஆசிய கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் இவருக்கு இடம் அளிக்கப்படவில்லை. காரணம், ஒரு பார்ட் டைம் பவுலர் அணிக்கு தேவைப்படுகிறார். இதனால் இவருக்கு பதிலாக தீபக் ஹூடா அணியில் இடம் பிடித்திருக்கிறார். இவர் ரிசர்வ் வீரராக அணியில் தொடருகிறார்.

இஷான் கிஷான்;

டி20 போட்டிகளில் இந்திய அணியின் மாற்று துவக்க ஆட்டக்காரர் ஆகவும், இரண்டாவது விக்கெட் கீப்பர் ஆகவும் இருந்து வந்த இவருக்கு, பினிஷிங் ரோலில் கலக்கி வரும் தினேஷ் கார்த்திக்கால் இந்திய அணியில் இடம் இல்லாது போயிருக்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியிலேயே ரிஷப் பண்ட் சூரியகுமார் போன்றவர்கள் துவக்க வீரராக களம் இறங்க முடியும், தேவைப்பட்டால் விராட் கோலியும் துவக்க வீரராக களம் இறங்குவார். அதனால் இவரது தேவை அணிக்கு இல்லை.

- Advertisement -

அக்சர் படேல்;

லெப்ட் ஹேண்ட் ஆர்த்தடாக்ஸ் ஸ்பின்னர் அக்சர் படேல் பேட்டிங்கிலும் தற்போது மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வந்தார். இவரை ஒரு பின் ஆல்-ரவுண்டராக இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்தி பரிசோதித்து வந்தது. இந்த நிலையில் இந்திய அணியில் சாகல் அஸ்வின் பிஷ்னோய் என மூன்று ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆனால் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் எதிர்காலத்தில் இந்திய அணியில் இவருக்கான வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.

முகமது சமி:

தற்கால கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் முகமது சமியும் ஒருவர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக புதுப் பந்தில் மிகப் பிரமாதமாகப் பந்துவீசி இருந்தார். இவரது பந்துவீச்சை புதுப் பந்தில் எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் மிகச் சிரமப் பட்டார்கள். இருந்தும் இவருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இவரை இந்திய அணி 50 ஓவர் போட்டிகளுக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கும் பயன்படுத்தும் இடத்தில் இருப்பதாக தெரிகிறது.

குல்தீப் யாதவ்:

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இருந்து டெல்லி அணிக்கு இந்த ஆண்டு மாறிய இவரின் செயல்பாடு மிகச் சிறப்பாக மாறியது. இதனால் இந்திய வெள்ளைப்பந்து அணிக்குத் திரும்பிய இவர் காயத்தால் பாதிக்கப்பட்டார். காயத்தில் இருந்து குணமடைந்த இவர் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் தேர்வு செய்யப்பட்டு, ஐந்தாவது டி20 போட்டியில் விளையாட வாய்ப்பு தரப்பட்டது. இந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனாலும் அணியில் நிறைய ஸ்பின்னர்கள் இருப்பதால் இவருக்கு தற்போது வாய்ப்பு கிடைக்கவில்லை!