இதுக்காகவே கேஎல் ராகுல் கேப்டனா இருக்கலாம்ப்பா.. அப்போ விராட் கோலி, இப்போ புஜரா!

0
694

கேஎல் ராகுல் கேப்டன்சியில் வித்தியாசமான நிகழ்வுகள் நடந்தேறியுள்ளது.

நடைபெற்று வரும் வங்கதேசம் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், வழக்கமான கேப்டன் ரோகித் சர்மா காயத்தினால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. ஆகையால் கே எல் ராகுல் கேப்டன் பொறுப்பேற்று விளையாடி வருகிறார்

- Advertisement -

இந்திய அணி முதல் இன்னிங்சில் 254 ரன்கள் முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு துவக்க வீரர் சுப்மன் டெஸ்ட் போட்டியில் முதல் சதத்தை அடித்தார். இதற்கு முன்னர் தனது முதல் ஒருநாள் போட்டிக்கான சதத்தை இதே கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பில் இருந்தபோது அடித்திருந்தார்.

அதேபோல், டெஸ்ட் வீரர் சித்தேஸ்வர் புஜாரா கடந்த மூன்றரை ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்க முடியாமல் தவித்து வந்தார். 52 இன்னிங்ஸ்களுக்கு பிறகு வங்கதேச அணியுடன் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்களில் சதம் அடித்து குறையை தீர்த்தார். இதுவும் கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பில் இருந்தபோது வந்திருக்கிறது.

இதற்கு முன்னர், நீண்டகாலமாக விராட் கோலியும் சர்வதேச போட்டிகளில் சதம் அடிக்க முடியாமல் தவித்து வந்தார். அவரும் டி20 மற்றும் ஒருநாள் சதங்களை கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பில் இருக்கும்போது அடித்தது மற்றொரு வினோதமாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

2022 ஆசிய கோப்பை டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ரோகித் சர்மா வெளியில் அமர்ந்ததால், கேஎல் ராகுல் கேப்டன் பொறுப்பேற்று ஆடினார். அப்போட்டியில் தான் விராட் கோலி தனது முதல் டி20 சதத்தை அடித்தார்.

மேலும் வங்கதேசம் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா இல்லாததால், கேஎல் ராகுல் கேப்டனாக இருந்தார். அப்போது விராட் கோலி 2 1/2 வருடங்களாக அடிக்காமல் இருந்த ஒருநாள் போட்டிக்கான சதத்தை அடித்தார்.

கேஎல் ராகுல் தனது கேப்டன் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டாரா? இல்லையா? என்பது மற்றொரு விவாதமாக இருந்தாலும், சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி ஆகியோருக்கு கேஎல் ராகுல் ஒரு ராசி கேப்டனாக நிச்சயம் இருந்திருக்கிறார்.