ஐபிஎல் தொடரில் ஒரு சில சமயங்களில் எதிர்பாராதவகையில் வீரர்களுக்கு இடையே சண்டை வரும். ஒரு சில சண்டைகள் ஆரம்பித்த சில நொடிகளிலேயே தீர்ந்துவிடும். நடுவர்கள் மற்றும் சக அணி வீரர்கள் இடையில் தலையிட்டு வீரர்களை சமாதானப்படுத்தினார்கள்.
ஆனால் ஒரு சில சண்டைகள் எல்லை மீறி அரங்கேறும். அப்படி நடை பெற்ற ஒரு சில சண்டைகள் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பேசப்பட்டும் இருக்கிறது. அப்படி அரங்கேறிய ஒரு சில சண்டைகளை பற்றி தற்போது பார்ப்போம்.
ஹர்பஜன் சிங் மற்றும் அம்பத்தி ராயுடு 2016
2011 ஆம் ஆண்டு மும்பை மற்றும் புனே அணிகள் மோதிக் கொண்ட ஒரு போட்டியில் ஹர்பஜன் சிங் மற்றும் அம்பத்தி ராயுடு இவர்கள் இருவருக்கிடையே மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. மும்பை அணியில் இவர்கள் இருவரும் விளையாடி வந்தனர்.
ஹர்பஜன் சிங் வீசிய பந்தை புனே அணியில் விளையாடிய சவுரப் திவாரி அடித்தார். அந்த பந்து நேராக அம்பத்தி ராயுடு நின்று கொண்டிருந்த திசையில் சென்றது. அம்பத்தி ராயுடு தன்னால் முடிந்தவரை அந்த பந்தை தடுக்க பார்த்தார். எனினும் இறுதியில் அந்த பந்து பவுண்டரி சென்றது. இதனால் கோபமடைந்த ஹர்பஜன் சிங் அம்பத்தி ராயுடுவை திட்டி தீர்த்தார்.
அதன் பின்னர் இவர்கள் இருவருக்கும் மிகப் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது பின்னர் மும்பை அணியில் இருந்த சக வீரர்கள் இவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி இயல்பு நிலைக்கு திரும்ப வைத்தனர்.
முனாஃப் பட்டேல் மற்றும் அமித் மிஷ்ரா 2011
2011ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அமித் மிஸ்ரா மற்றும் முனாஃப் பட்டேல் இடையே சண்டை ஏற்பட்டது. டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் விளையாடிய அமித் மிஷ்ரா இறுதி ஓவர்களில் முனாஃப் பட்டேல் வீசிய பந்துகளை மேற்கொண்டார். முனாஃப் பட்டேல் வீசிய பந்தை சிக்சருக்கு மற்றும் பவுண்டரிக்கு அமித் மிஸ்ரா விரட்ட முனாஃப் படேல் கோபமடைந்தார். பின்னர் முனாஃப் பட்டேல் அமித் மிஸ்ரா பக்கம் சென்று சில வார்த்தைகளை அவரிடத்தில் பகிர்ந்தார்.
பதிலுக்கு அமித் மிஸ்ராவும் சில வார்த்தைகளை முனாஃப் பட்டேல் இடம் பகிர்ந்தார். இருவரும் ஒரு கட்டத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் நடுவர்கள் மற்றும் சக அணி வீரர்கள் வந்து சமாதானப்படுத்த இவர்கள் இருவரும் கலைந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
கிரன் பொல்லார்ட் மற்றும் மிச்செல் ஸ்டார்க் 2014
இந்த சண்டையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட மாட்டார்கள். மும்பை அணியில் விளையாடி கொண்டிருந்த கீரன் பொல்லார்ட் பெங்களூர் அணியின் பந்து வீச வந்த ஸ்டாரிடக்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மிச்செல் ஸ்டார்க் வேகமாக பந்து வீச வந்த வேளையில் பொல்லார்ட் கடைசி நொடியில் சற்று நகர்ந்து கொண்டார். எனினும் மிட்செல் ஸ்டார்க் நிற்காமல் பந்து வீசினார். இதனால் கோபம் அடைந்த பொல்லார்ட் தனது பேட்டை ஸ்டார்க் பார்க்கும் வண்ணம் வீசினார்.
பின்னர் இவர்கள் இருவரும் மிகப்பெரிய வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் நீடித்த இந்த பேச்சு வார்த்தை சக அணி வீரர்கள் மற்றும் போட்டி நடுவர்கள் துணையோடு ஒருவழியாக முடிவுக்கு வந்தது குறிப்பிடதக்கது.
கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலி 2013
2013ம் ஆண்டு நடைபெற்ற ஓர் ஆய்வில் போட்டியில் டெல்லியை செல்ல இந்த இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய போட்டியில் பெங்களூர் அணி கொல்கத்தா நிர்ணயித்த இலக்கை சேஸ் செய்து கொண்டிருந்தது. அந்த வேளையில் ஒரு சமயத்தில் விராட் கோலி அவுட் ஆனார். விராட் கோலி அவுட் ஆன நிலையில் அனைத்தும் கொல்கத்தா வீரர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்
இதனை விராட் கோலி ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே பதிலுக்கு அவர் கொல்கத்தா அணி வீரர்களை சீண்டினார். இதனைக்கண்ட கொல்கத்தா அணியின் கேப்டன் கௌதம் கம்பீர் பதிலுக்கு விராட் கோலி இடம் சில வார்த்தைகளை கூறினார். பின்னர் இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியில் ஒரு வழியாக நடுவர்கள் துணையோடு இவர்கள் இருவரும் சமாதானம் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீசாந்த் மற்றும் ஹர்பஜன்சிங் 2008
இந்த சண்டையை அவ்வளவு எளிதில் எந்த ஒரு இந்திய ரசிகரும் மறந்துவிட மாட்டார்கள். 2008ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஆபாசம் சிங் ஸ்ரீசாந்தை அறைந்து விட்டார்.
உண்மை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய அந்த போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்தது. வெற்றியை அனைத்து வீரர்களும் கொண்டாடியது போல் ஸ்ரீசாந்த் கொண்டாடினார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த ஹர்பஜன்சிங் நிதானமிழந்து ஸ்ரீசாந்தை அறைந்து விட்டார்.இந்த சம்பவம் அந்த சமயத்தில் இந்திய அளவில் வைரலாகி அனைத்து ரசிகர்களும் இந்த சமூகத்தில் கிட்டத்தட்ட பல நாட்களாக பேசி வந்தது குறிப்பிடத்தக்கது.