தோனி கேப்டனாக இருக்கும்போது இப்படியொரு வேலையை செய்வார்.. ஆனால் இப்போது இருப்பவர்கள் செய்வதில்லை, அதான் 10 வருடங்கள் கோப்பை இல்லாமல் இருக்கிறோம் – உண்மையை உடைத்த அஸ்வின்!

0
5222

“தோனி கேப்டனாக இருக்கும்பொழுது வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுப்பார். ஆனால் இப்போது இருப்பவர்கள் அதை செய்வதில்லை.” என்று தனது சமீபத்திய பேட்டிகள் பேசியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்திய அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் கடைசியாக 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதன் பிறகு 10 வருடங்கள் ஆகியும் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாமல் இந்திய அணி தவித்து வருகிறது.

- Advertisement -

தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலககோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் மேஸ் மற்றும் 2013-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி நடத்தும் அனைத்து கோப்பைகளையும் வென்றது.

அதன்பின் வந்த கேப்டன்கள் ஒரு கோப்பையையும் வெல்ல முடியவில்லை. ஆனால் நான்கு முறை செமி பைனல், நான்கு முறை பைனல் வரை இந்திய அணி சென்றது. இப்படி முக்கியமான கட்டத்தில் தோல்வியை தழுவி கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறி வருவதால் இந்திய அணியின் கேப்டன்கள் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வரை வந்தும் கோப்பையை வெல்ல முடியாமல் இந்திய அணி ஏமாற்றத்தை பெற்றது. இந்நிலையில் இந்திய அணி ஏன் 10 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியவில்லை? அதேநேரம் தோனியின் கேப்டன் பொறுப்பில் தொடர்ந்து கோப்பைகளை பெற்று வந்தது எப்படி? என்பது குறித்து தனது யூடியூப் தளத்தில் பேசியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

- Advertisement -

“தோனி கேப்டனாக இருந்தபோது குறிப்பிட்ட 15 வீரர்களை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்தார். குறைந்தபட்சம் ஓராண்டாவது அதே 15 வீரர்களுடன் ஒவ்வொரு தொடருக்கும் செல்வார். எத்தகைய தவறு நேர்ந்தாலும் அதற்காக வீரரை வெளியில் அனுப்பாமல், தோளில் தட்டிக்கொடுத்து விளையாட வைப்பார்.

இன்னும் குறிப்பாக ஒரே பிளேயிங் லெவனில் செல்வார். ஏதாவது ஒரு இக்கட்டான சூழலில் மட்டுமே இருக்கும் வீரர்களை மாற்றுவார். இதன் காரணமாக அவரால் தொடர்ந்து வீரர்களை நன்றாக செயல்படவைக்க முடிந்தது. வீரர்களும் தொடர்ந்து அணியில் வாய்ப்புகள் கிடைக்கிறது, அதற்கு பலனாக நாம் நன்றாக செயல்பட வேண்டும் என்று நம்பிக்கையுடன் 100 சதவீதம் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

ஆனால் சமீபகாலமாக வீரர்கள் ஓரிரு போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றாலும் கேப்டன்கள் அவர்களை உடனடியாக தூக்கி விடுகிறார்கள். இதனால் வீரர்களுக்கு தன்னம்பிக்கை குறைவது மட்டுமல்லாது, அடுத்த போட்டியில் இருப்போமா? இல்லையா? என்கிற சந்தேகத்திலேயே இருக்கின்றனர். அதனால் முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை. திறமை இருந்தும் கிடைக்கும் ஒரே போட்டியில் அனைவராலும் சரியாக பயன்படுத்த முடியாது அல்லவா?.

இதுதான் இத்தனை ஆண்டுகளாக கோப்பை இல்லாமல் இருப்பதற்கு காரணமாக பார்க்கிறேன். வீரர்களுக்கு தொடர்ந்து நம்பிக்கை அளிக்க வேண்டும். அடுத்தடுத்த போட்டியில் வாய்ப்புகள் கொடுத்து நன்றாக செயல்படுவதற்கு ஊக்கமாக இருக்க வேண்டும்.” என்று பேசினார்.