151 கிலோ மீட்டர் வேகத்தில் ஸ்டம்பை பறக்கவிட்ட உம்ரன் மாலிக் வீடியோ இணைப்பு!

0
2726
Umranmalik

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் விளையாட ரோகித் சர்மா தலைமையில் பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது!

இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை சந்தித்து இருந்தது!

- Advertisement -

இதற்கு அடுத்து இன்று இந்த தொடரில் இரண்டாவது போட்டியான இந்திய அணிக்கு வாழ்வா சாவா போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் குல்தீப் சென் மற்றும் சபாஷ் அகமத் இருவரும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக உம்ரான் மாலிக் மற்றும் அக்சர் படேல் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளார்கள்!

இந்தப் போட்டியில் முதலில் டாசில் வென்று பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. இந்தப் போட்டியிலும் இந்திய அணியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாகவே இருந்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இதற்கு அடுத்து பந்து வீச வந்த இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளரான உம்ரன் மாலிக் தனது வேகத்தில் மிரட்டினார். பங்களாதேஷ் அணியின் துவக்க ஆட்டக்காரர் நஜிமுல் ஹோசைன் சான்டோவுக்கு மணிக்கு 151 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் வீசியப்பந்து, பேட்ஸ்மேன் விளையாடுவதற்கு நேரம் தராமல் நேராக ஸ்டம்பை பதம் பார்த்து காற்றில் பறக்க விட்டது. இவரது வேகபந்துவீச்சை பார்ப்பது தீ மாதிரி களத்தில் தெரிகிறது. இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

- Advertisement -