“உம்ரான் மாலிக் வேகத்தை மட்டுமே வெச்சிகிட்டு எதுவும் பண்ண முடியாது” – இந்திய அணியை ஒட்டுமொத்தமாக அலசிய பிராட் ஹாக்!

0
340
Hogg

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு தற்பொழுது சுற்றுப் பயணம் செய்திருக்கிறது. இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோற்றதற்கு பிறகான இந்திய அணியின் இந்த சுற்றுப்பயணம், அடுத்து நடக்க இருக்கின்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்குமான முக்கிய சுற்றுப்பயணமாக அமைகிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நாளை டொமினிக்கா மைதானத்தில் துவங்க இருக்கிறது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மைதானத்தில் இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியை விளையாடுகிறது.

இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சேர்த்து அறிவிக்கப்பட்ட அணிகளில் ஜெய்ஸ்வால், முகேஷ் குமார் மற்றும் திலக் வருமா மூவரும் முதல் வாய்ப்புகளை பெற்றிருக்கிறார்கள். நாளை தொடங்கும் டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் மற்றும் முகேஷ் குமார் இருவரும் வாய்ப்பு பெறுவார்கள் என்று தெரிகிறது.

மேலும் இந்தச் சுற்றுப்பயணத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய அணியில் இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளரான ஜம்மு காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பதற்கு முன்பாக அவருக்கு இது மிக முக்கியமான தொடர்.

- Advertisement -

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அவரது அதிவேக பந்துவீச்சால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை. எட்டு போட்டுகளில் விளையாடிய அவர் ரண்களை அதிகம் வழங்கி ஐந்து விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். அவரது பந்துவீச்சில் வேரியேஷன்கள் இல்லாதது குறையாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முக்கிய இளம் வீரர்கள் குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பிராட் ஹாக் ” ஹர்திக் பாண்டியா பேட்டிங் மிகவும் நன்றாக எல்லாம் இல்லை. அவர் கொஞ்சம் கொஞ்சம் தடுமாறவே செய்கிறார். ஆனால் அவர் திறமையானவர் என்பதில் சந்தேகம் இல்லை. அர்ஸ்தீப்புக்கு இது மிக முக்கியமான தொடராக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஐபிஎல் தொடர் மிகச் சரியாக அமையாத காரணத்தினால் தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் தொடர் உம்ரான் மாலிக்குக்கு மிக முக்கியமான தொடராக இருக்கும். வேகத்தை வைத்து மட்டுமே எல்லாம் செய்துவிட முடியாது என்பதை அவர் இந்தத் தொடரில் உணர்ந்து கொள்வார் என்று நான் நினைக்கிறேன்.

தேர்வுக்குழுவினர் இந்த முறை இளைஞர்களை நோக்கி சென்று உள்ளார்கள். இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவர்கள் என்ன நடக்கிறது என்று பார்க்க விரும்புகிறார்கள். இளைஞர்களுக்கு சர்வதேச அனுபவத்தை தர விரும்புகிறார்கள். மேலும் அடுத்த டி20 உலகக் கோப்பைக்காக முன்னோக்கி நகருகிறார்கள்!” என்று கூறி இருக்கிறார்!