இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஐந்தாவது மற்றும் இறுதி டி20 போட்டி பெங்களூர் நகரில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் இழந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 154 ரன்கள் மட்டுமே எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்தியா 6 ரன்களில் வெற்றி பெற்றதோடு 4-1 என்ற கணக்கில் இந்தத் தொடரையும் வென்றது.
பரபரப்பான இந்த போட்டியின் ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறுவது போல் இருந்தது. எனினும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி ஆஸ்திரேலியா அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக இருந்தனர்.
இந்தப் போட்டியின் இறுதி ஓவரில் நடைபெற்ற ஒரு சம்பவத்தால் ஆஸ்திரேலியா வீரர்கள் அதிருப்தி அடைந்தனர். ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற கடைசி ஆறு பந்துகளில் 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சூழலில் இறுதி ஓவரையும் வீசினார் அர்ஷ்தீப் சிங்.
அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகள் ஆஸ்திரேலிய வீரர்களால் ரன் எதுவும் எடுக்க முடியவில்லை. மேலும் இறுதி ஓவரின் மூன்றாவது பந்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மேத்யூ வேட் விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்நிலையில் இறுதி மூன்று பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டபோது கேசன் பெஹ்ராண்டஃப் 1 ரன் எடுக்க இறுதி 2 பந்துகளில் 9 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது ஸ்ட்ரைக் வந்த நேத்தன் எல்லிஸ் அர்ஷதிப் வீசிய இறுதி ஓவரின் ஐந்தாவது பந்தை ஸ்ட்ரைட் பேட்டில் அடித்தார். அந்தப் பந்து அர்ஷதிப் சிங்கின் கைகளைத் தாண்டி நேராகச் சென்றது. பவுண்டரி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அம்பையர் கால்களில் பட்டதால் ஒரு ரன் மட்டுமே ஆஸ்திரேலியா வீரர்களால் எடுக்க முடிந்தது. இதனால் பேட்ஸ்மேன் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் இந்தப் போட்டியை ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா வீரர்களும் பந்தை அம்பையர் தடுத்ததால் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். எனினும் அது அம்பையரின் தவறு அல்ல.
அம்மையர் தன்னை பந்திடமிருந்து தற்காத்துக் கொள்ள விலகிய போது அவரது காலில் பந்து பட்டது. பவுலரின் கையில் பட்டு அம்பேரின் பக்கம் திரும்பியதும் இதற்கு ஒரு காரணம். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தப் பதிவுடனும் அந்த வீடியோ இணைக்கப்பட்டு இருக்கிறது.
When the umpire is relieved that the impact isn't in line 😅#INDvAUS #IDFCFirstBankT20ITrophy #JioCinemaSports pic.twitter.com/67VD3ej9um
— JioCinema (@JioCinema) December 3, 2023