2-1.. மீண்டும் பட்டையை கிளப்பிய யுஏஇ வரலாற்று தொடர் வெற்றி.. பங்களாதேஷ் அணி பரிதாபம்

0
149
UAE

நேற்று யுஏஇ அணி தங்களது சொந்த மண்ணில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் முதல்முறையாக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.

தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 அணிகளும் மோதி வருகிறது. இதில் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி பெற்று இருந்தது. இதைத்தொடர்ந்து இரண்டாவது டி20 போட்டியில் யுஏஇ அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்திருந்தது. இதற்கு அடுத்து தொடரை முடிவு செய்யும் மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது.

- Advertisement -

யுஏஇ கலக்கல் பவுலிங்

இதைத்தொடர்ந்து டாஸ் வென்ற யுஏஇ முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த பங்களாதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் தன்ஷித் ஹசன் அதிரடியாக 18 பந்தில் 40 ரன்கள், லோயர் மிடில் ஆர்டர் ஜாகெர் அலி 34 பந்தில் 41 ரன்கள் எடுத்தார்கள்.

இதைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணிக்கு இந்த போட்டியில் வேறு எந்த பேட்ஸ்மேன்களும் குறிப்பிட தகுந்த அளவில் விளையாடவில்லை. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. யுஏஇ பந்துவீச்சில் ஹைதர் அலி 3, மட்டுல்லாஹ் கான் மற்றும் சாகீர் கான் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

யுஏஇ வரலாற்று சாதனை

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய யுஏஇ அணிக்கு பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக வந்த அலிசன் சர்பு அதிரடியாக 47 பந்தில் 68 ரன்கள் குவித்தார். பேட்டிங் வரிசையில் ஐந்தாவதாக வந்த ஆசிப் கான் ஆட்டம் இழக்காமல் 26 பந்தில் 41 ரன்கள் எடுத்து போட்டியை வெற்றிகரமாக முடித்து வைத்தார்.

இதையும் படிங்க : வெறும் 121 ரன்.. ஆர்சிபியை தாண்டி சாதித்த மும்பை.. ப்ளே ஆப்க்கு முன்னேறியது.. டெல்லி அணி பரிதாபம்

இறுதியாக யுஏஇ அணி 19.1 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்டாட்டம் 20 தொடரை 2-1 எனக் கைப்பற்றி அசத்தியது. மேலும் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஒரு நாட்டுக்கு எதிராக முதல்முறையாக தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனையையும் படைத்திருக்கிறது.

- Advertisement -