வெறும் 121 ரன்.. ஆர்சிபியை தாண்டி சாதித்த மும்பை.. ப்ளே ஆப்க்கு முன்னேறியது.. டெல்லி அணி பரிதாபம்

0
689
Surya

இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவுடன் நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது.

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தன. இந்த நிலையில் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே யார் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது என்கின்ற போட்டி இருந்தது. இந்த நிலையில் இரண்டு அணிகளும் நேரடியாக மோதிய சூழலில் இந்த போட்டி முடிவுக்கு வந்திருக்கிறது.

- Advertisement -

தனியாளாக சாதித்த சூரியகுமார்

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அந்த அணியின் கேப்டன் அக்சர் படேல் காயத்தின் காரணமாக விளையாடவில்லை. இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய வந்த மும்பை அணிக்கு ரோகித் சர்மா 5, ரிக்கல்டன் 25, திலக் வர்மா 27, வில் ஜேக்ஸ் 21 மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இருந்த போதிலும் ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய சூரியகுமார் ஆட்டம் இழக்காமல் 43 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன், இவருக்கு சிறப்பான ஒத்துழைப்பு தந்த நமன் திர் ஆட்டம் இழக்காமல் 8 பந்தில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 24 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் முகேஷ் குமார் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

மும்பை பிளே ஆப்க்கு தகுதி

இதைத் தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அனுபவ வீரர்கள் கேஎல்.ராகுல் 11, பாப் டு பிளேசிஸ் 6 என சொற்ப ரன்னில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதிலிருந்து கடைசி வரையில் டெல்லி அணியால் மீளவே முடியவில்லை. இறுதியில் அந்த அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டும் எடுத்து 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வாய்ப்பில் இருந்து வெளியேறியது. மும்பை பிளே ஆப் சுற்றுக்குள் தொலைந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சில் சான்ட்நெற் 4 ஓவர்கள் பந்து வீசி 11 ரன்கள் மட்டுமே விட்டுத்தந்து 3 விக்கெட் கைப்பற்றினார். இவருடன் சேர்ந்து பும்ரா 3.2 ஓவரில் 12 ரன்கள் மட்டுமே விட்டு தந்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையும் படிங்க : இந்திய ஏ அணிக்கு எதிராக.. இங்கிலாந்து ஏ அணி அறிவிப்பு.. நட்சத்திர வீரர் மகனுக்கு இடம்.. முழு தகவல்கள்

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக சிஎஸ்கே அணி 12 முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. இதற்கு அடுத்து ஆர்சிபி 10 முறை தகுதி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் ஆர்சிபி அணியின் சாதனையை முறியடித்து மும்பை இந்தியன்ஸ் அணி 11 வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

- Advertisement -