U19 உலகக் கோப்பை.. ஒரே நாளில் 2 எதிர்பாரா வெற்றி.. நேபாளம் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அபாரம்.. சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி

0
7094

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்காவில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் நேபாள அணி ஆப்கானிஸ்தான் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணியையும் வீழ்த்தி அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.

இதில் நடைபெற்ற 19வது போட்டியில் நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி 40 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் மட்டுமே குவித்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, 7வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் மரூப்கில் மற்றும் கஜன்பர் ஆகியோர் மட்டுமே சிறிது நேரம் களத்தில் நின்று போராடினர்.

- Advertisement -

இதில் கேப்டன் மரூப்கில் 31 ரன்களில் ஆட்டம் இழந்தார். மற்றொரு பேட்ஸ்மேன் ஆன கஜன்பர் அதிரடியாக விளையாடி 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் குவித்து 37 ரன்களில் ஆட்டம் இழந்தார். பிறகு களம் இறங்கிய பேட்ஸ்மேன்களில் தவுத்சாய் மட்டுமே
ஆறுதல் அளிக்கும் விதமாக 29 ரன்கள் குவித்தார். இதில் குறிப்பிடும் விதமாக ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் ஐந்து பேர் டக் அவுட் ஆகி உள்ளனர். இதில் நேபாள அணித் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஆகாஷ் சந்த் 37 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

பின்னர் களமிறங்கிய நேபாள அணிக்கும் முதலில் விக்கெட்டுகள் சரியத் தொடங்கியது. 24 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் கேப்டன் கனல் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். 58 ரன்கள் குவித்து கனல் ஆட்டம் இழந்த நிலையில், பின்னால் வந்த வீரர்கள் சரியான பங்களிப்பை வெளிப்படுத்த முடியவில்லை. இதனால் 144 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் மாட்டிக் கொண்டது நேபாளம் அணி. அப்போது களத்தில் இருந்த சுபாஷ் பந்தாரி நிதானமாக விளையாடி 9 ரன்கள் குவித்து நேபாள அணியின் வெற்றி உறுதி செய்தார். இதனால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் நேபாள அணி சிறப்பான வெற்றி பெற்று சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இதில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 46 ஓவர்களில் 192 ரன்களுக்கு அனைத்து விக்கெடுகளையும் இழந்தது. இதில் பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க வகையில் தாயின் 40 ரன்களையும், ஷாஹிக் 54 ரன்களையும் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய எட்வர்ட் 3 விக்கெட்டைகளை வீழ்த்தினார்.

- Advertisement -

பின்னர் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையுடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க வீரர் வெயிர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஸ்டீபன் பாஸ்கல் சிறப்பாக விளையாடி 58 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய டோரனே எட்டு ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில் பின்னர் களமிறங்கிய ஜான்சன் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

156 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் எட்வார்டு பேட்டிங்கிலும் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி 41 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்று சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குத் தகுதி பெற்றது.