U19 உலககோப்பை.. வம்பிழுத்த பங்களாதேஷ்.. வச்சு செய்த இந்திய வீரர்கள்.. அபார வெற்றி

0
2439
U19wc

தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் 19 வயது உட்பட்டவர்களுக்கான அண்டர் 19 உலகக்கோப்பை தொடர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காராக வந்த அர்சின் குல்கர்னி 7, அடுத்து வந்த முசிர் கான் 3 என அடுத்தடுத்து வெளியேறினார்கள். இதனால் பங்களாதேஷ் அணி கூடுதல் உற்சாகமடைந்தது.

ஆனால் இன்னொரு துவக்க ஆட்டக்காரர் ஆதர்ஷ் சிங் மற்றும் கேப்டன் உதய் சாகரன் இருவரும் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து இருவரும் அரைசதம் அடித்தார்கள். இந்த ஜோடி 131 ரன்கள் சேர்த்தது.

ஆதர்ஷ் சிங் 76, உதய் சாகரன் 64, மோலியா 23, ஆரவல்லி அவினாஷ் 23, சச்சின் தாஸ் 26 என ரன்கள் எடுக்க, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் சேர்த்தது. பங்களாதேஷ் தரப்பில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மருப் ம்ரீதா எட்டு ஓவர்களுக்கு 43 ரன்கள் தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இந்த போட்டியில் பங்களாதேஷ் பந்துவீச்சின் போது, அந்த அணியின் சுழற் பந்துவீச்சாளர் அரிஃபுல் இஸ்லாம் இந்திய அணி கேப்டன் உதய் சாகரனிடம் வார்த்தைகளை விட்டு வம்பு இழுத்தார். நடுவர்கள் தலையிட்டு இது சமாதானப்படுத்தினார்கள். ஆரவல்லி அவினாஷ் விக்கெட்டை கைப்பற்றிய மரூப் ம்ரிதா, அவரை வெளியேறுமாறு இரண்டு முறை முகத்திற்கு நிறை வந்து கத்தி கூச்சலிட்டார். மீண்டும் நடுவர் வந்து எச்சரித்தார். பங்களாதேச இளையோர் அணி வழக்கமாக இப்படி நடந்து கொண்டே இருக்கிறது.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாட வந்த பங்களாதேஷ் அணிக்கு இந்திய வீரர்கள் சரியான பதிலடி பந்துவீச்சிலும் நடவடிக்கையிலும் கொடுத்தார்கள். அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் தலா 14 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். 50 ரன்கள் தொடுவதற்குள் நான்கு விக்கெட்டுகளை அந்த அணி இழந்து விட்டது.

இதற்கடுத்து ஆரிஃபுல் இஸ்லாம் 41, முகமத் சிகாப் ஜேம்ஸ் 54 ரன்கள் என ஒர் அளவுக்கு தாக்குப் பிடித்தார்கள். ஆனால் அடிக்க வேண்டிய ரன் ரேட் எகிறிக்கொண்டே இருந்ததால்பங்களாதேஷ் வீரர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

இறுதியாக பங்களாதேஷ் 45.5 ஓவர்களில் 167 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. இந்திய 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் தரப்பில் சௌமியா பாண்டே நான்கு விக்கெட்டுகளும் முசிர் கான் இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள். இந்திய அணி வீரர்கள் பங்களாதேஷ் விக்கெட்டுகளை ஆரம்பத்தில் கைப்பற்றிய பொழுது, அவர்கள் நடந்து கொண்ட விதத்திற்கு திருப்பி பதிலடி கொடுத்தார்கள்.