U19 உலககோப்பை.. 91/10.. 92/9.. 17பேர் ஒற்றை இலக்கம்.. ஆப்கான் நியூசிலாந்து போட்டி பரபரப்பு முடிவு

0
985
U19

தற்பொழுது 19 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கான டி20 உலக கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இன்று தென் ஆப்பிரிக்கா ஈஸ்ட் லண்டனில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் எடுத்த முடிவுக்கு தகுந்தபடி அவர்கள் விளையாடவில்லை.

அந்த அணியில் மொத்தம் ஒன்பது வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ரன் எடுத்தார்கள். ஜம்ஷீட் ஜட்ரன் 22, அராப் குல் 10 இருவர் மட்டுமே ஒற்றை இலக்கத்தை தாண்டி ரன்கள் எடுத்தார்கள்.

ஆப்கானிஸ்தான அணி 21.3 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணியில் மேட் ரோவ் எட்டு ஓவர்களுக்கு 21 ரன்கள் தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கும் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணிக்கு முதல் ஆறு விக்கெட்டுகள் 52 ரன்களுக்கு விழுந்துவிட்டது.

தொடர்ந்து விளையாடிய அந்த அணியின் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்டபொழுது 90 ரண்களுக்கு ஒன்பது விக்கெட்டுகள் விழுந்து விட்டது.

கைவசம் ஒரு விக்கெட் இருக்க, இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்கின்ற பரபரப்பான நிலைக்கு ஆட்டம் சென்றது. பந்துவீச்சில் 5 விக்கெட் கைப்பற்றிய மேட் ரோவ் பேட்டிங்கில் நின்று, ஐந்து ரன்கள் எடுத்து அணியைக் கடைசியில் வெற்றி பெற வைத்தார்.

இதையும் படிங்க : U19 உலககோப்பை.. வம்பிழுத்த பங்களாதேஷ்.. வச்சு செய்த இந்திய வீரர்கள்.. அபார வெற்றி

இந்தப் போட்டியில் நியூசிலாந்து தரப்பிலும் ஆஸ்கார் ஜாக்சன் 26, ஸ்டாக்போல் 12 என இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன் எடுத்தார்கள். மேலும் 10 ஆப்பிரிக்க தரப்பிலும் எட்டு வீரர்கள் ஒற்றை இலக்க உடன் மட்டுமே எடுத்தார்கள். இந்த போட்டியில் மட்டும் ஒட்டுமொத்தமாக 17 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ரன் எடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

.