U19.. இந்திய வீரரின் தம்பி அசத்தல் பவுலிங் பேட்டிங்.. தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!

0
675
Sharan

தற்பொழுது தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆப்கானிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்ட மூன்று அணிகள் மோதிக் கொள்ளும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இன்று இந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியும் இந்திய அணியும் மோதிய போட்டி ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு ஸ்டீவ் ஸ்டோல்க் 69, டிவான் மரைஸ் 32, ரயிலி நார்டன் 32 ரன்கள் எடுக்க, 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 256 ரன்களை தென் ஆப்பிரிக்கா எடுத்தது.

இந்திய அணியின் தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் நமன் திவாரி மூன்று விக்கெட்டுகளையும், சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டரும் சர்பராஸ் கானின் தம்பியுமான முசீர் கான் ஐந்து விக்கட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ருத்ர படேல் 1, மகஜன் 0 சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். பந்துவீச்சில் கலக்கிய முசீர் கான் மூன்றாவதாக வந்து 41 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து கேப்டன் உதய் சகரன் மற்றும் பிரியனாஸ் மோலியா இருவரும் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியின் வெற்றியை மிக எளிதாக்கினார்கள். கேப்டன் உதய் சகரன் 112 ரன்கள் எடுத்து அசத்தினார். பிரியனாஸ் மோலியா இறுதிவரை ஆட்டமெலக்காமல் 76 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.

இறுதியாக இந்திய அணி 48.4 ஓவர்களில் 260 ரன்கள் எடுத்து, நான்கு விக்கெட் மட்டும் இழந்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பையும் பெற்றிருக்கிறது!