U19.. 7ஓவரில் மேட்சை முடித்த இந்தியா.. 11 பேரும் ஒற்றை இலக்கம்.. 7விக்கெட் அள்ளிய இந்திய பவுலர்!

0
837
U19

தற்போது 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றன.

இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் இந்தியா நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் முதலில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்துக் கொண்டது.

- Advertisement -

அனுபவம் குறைவான நேபாள் வீரர்கள் இந்திய அணியின் திறமையான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார்கள். அந்த அணி 26 ரன்களுக்கு ஆறு விக்கெட் இழந்தது.

மேற்கொண்டு சுதாரித்து விளையாடிய அந்த அணியால் நான்கு விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு மீண்டும் 26 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

22.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நேபாள் அணி 52 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் 11 வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

இந்திய அணியின் தரப்பில் மிகச் சிறப்பாக பந்து வீசிய ராஜ் லிம்பானி 9.1 ஓவரில் மூன்று மெய்டன்கள் செய்து, 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஏழு விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இதற்கு அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 7.1 ஓவரில் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆதர்ஷ் சிங் 13 பந்தில் 13 ரன்கள் எடுக்க, அர்சன் குல்கர்னி அதிரடியாக 30 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார்.

இதற்கு முன்பு இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு இந்திய அணி இறுதி சுற்றை எட்டுவதற்கான வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக மாறியிருக்கின்றன!