U19 ஆசிய கோப்பை.. மீண்டும் பாகிஸ்தானுடன் போட்டி .. இந்திய வீரரின் தம்பிக்கு இடம்.. நாள் நேரம் முழு விபரம்.!

0
5332

8-வது ஆசிய கோப்பை அண்டர் 19 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் இன்று தொடங்கியது. எட்டு நாடுகள் கலந்து கொள்ளும் இந்த போட்டித் தொடர் முதலில் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. பின்னர் இது துபாய் நகருக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த ஆசிய கோப்பை போட்டி தொடரில் இந்தியா பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஸ்ரீலங்கா ஜப்பான் நேபால் மற்றும் யுஏஇ ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

ஆசியக் கோப்பை தொடரில் கலந்துகொள்ளும் எட்டு அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தியா பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபால் அணிகள் ஏ பிரிவிலும் பங்களாதேஷ் ஸ்ரீலங்கா ஜப்பான் மற்றும் யுஏஇ அணிகள் பி பிரிவிலும் இடம் பெற்று இருக்கின்றன. இந்த இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் அரையிறுதி போட்டிகளுக்கு தகுதி பெறும்.

- Advertisement -

இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இருக்கிறது. மேலும் இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியும் நேபால் அணியை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

கிரிக்கெட் போட்டி என்றாலே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கு பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இது அண்டர் 19 கிரிக்கெட்டுக்கும் பொருந்தும். கடந்த காலங்களிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அண்டர் 19 அணிகள் மோதிய போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று முடிந்தது. அண்டர் 19 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக நான்கு வெற்றிகள் பெற்றிருந்தாலும் கடைசியாக நடைபெற்ற 19 போட்டியில் பாகிஸ்தான் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இருக்கிறது.

எனினும் 2018 மற்றும் 2020 அண்டர் 19 உலக கோப்பை அரை இறுதி போட்டிகளில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் அண்டர் 19 ஆசிய கோப்பை போட்டிகளின் ஐந்தாவது ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மோத இருக்கின்றன. இந்தப் போட்டி இந்திய நேரப்படி 11 மணிக்கு தொடங்கும். உதய சகரன் தலைமையிலான இந்திய அணியும் மிர்சா பெய்க் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளது. இந்தப் போட்டி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிங் யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

- Advertisement -

ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய அண்டர் 19 அணியில் இந்திய அணி வீரரான சர்பராஸ் கானின் சகோதரர் முஷீர் கான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.சர்பராஸ் கான் இந்திய அணிக்காக இரண்டு அண்டர் 19 உலகக் கோப்பை விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2014 ஆம் ஆண்டு அண்டர் 19 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்றார் என்பதும் நினைவு இருக்கலாம்

இவரது சகோதரரான முஷீர் கான் மும்பை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர். இவர் மும்பை அண்டர் 19 மற்றும் மும்பை அண்டர் 22 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இந்திய அண்டர் 19 அணியில் இடம் பெற்று இருக்கிறார். மேலும் மும்பை அணிக்காகவும் ஒரு சில ரஞ்சித் டிராபி போட்டிகளில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பஷீர் கான் இடது கை பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 58 பந்துகளில் 43 ரன்கள் எடுத்ததோடு ஒரு விக்கெட் கைப்பற்றினார்.