ரோகித் செய்த 3 தவறுகள்.. மீறி கிடைத்த 2 டர்னிங் பாயிண்ட்.. இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக வென்றது எப்படி?

0
6805
Rohit

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நியூயார்க் நாசாவ் மைதானத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பரபரப்பான போட்டியில் பாகிஸ்தான் அணியை வென்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா கேப்டன்சியில் சில தவறுகள் இருந்தது. அதே சமயத்தில் இரண்டு இந்திய வீரர்கள் போட்டியில் முக்கியமான நேரத்தில் திருப்புமுனைகளை ஏற்படுத்தியும் தந்தார்கள்.

நியூயார்க் நாசாவ் மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு தொடர்ந்து மிகவும் கடினமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் கண்டிஷனுக்கு மதிப்பு கொடுத்து விளையாட நினைக்கவில்லை. அட்டாக் செய்து விளையாடவே நினைத்தார்கள். கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இந்திய நிர்வாகத்தின் இந்த அணுகுமுறை முதல் பெரிய தவறாக அமைந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்திய அணி 119 ரன்கள்தான் எடுத்திருந்தது. எனவே அணியின் மிக முக்கியமான பந்துவீச்சாளரான பும்ரா முதல் இரண்டு ஓவர்களில் பந்து வீச வந்து இருக்க வேண்டும். ஆனால் ரோகித் சர்மா அப்படி கொண்டு வரவில்லை. ஆனால் பும்ராதான் தன்னுடைய இரண்டாவது ஓவரில் பாபர் அசாமை வீழ்த்தி இந்திய அணிக்கு தொடக்கத்தை ஏற்படுத்தினார்.

இதற்கு அடுத்து டி20 கிரிக்கெட்டில் பந்துவீச்சில் வேரியேஷங்களை ஜடேஜாவை விட அக்சர் படேல் அதிகம் வைத்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் அதைக் காட்டினார். இப்படி இருக்கும் பொழுது கேப்டன் ரோஹித் சர்மா ஜடேஜாவை அழைத்துதான் முதல் இரண்டு ஓவர் பந்து வீச வாய்ப்பு தந்தார். ஆனால் அக்சர் படேல் வந்ததும் முதல் பந்தியிலேயே உஸ்மான் கான் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். நேற்று கேப்டன்ஷியில் ரோகித் சர்மா இந்த மூன்று விஷயங்களில் கொஞ்சம் தவறி இருந்தார்.

அடுத்து பாகிஸ்தான் அணி 14 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்திருந்தது. மேற்கொண்டு 36 பந்தில் அந்த அணியின் வெற்றிக்கு 40 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இந்த நிலையில் பந்து வீச வந்த பும்ரா 15ஆவது ஓவரின் முதல் பந்திலேயே சிறப்பாக செட்டாக இருந்த அபாயமான முகமது ரிஸ்வானை கிளீன் போல்ட் செய்தார். இதுதான் ஆட்டத்தின் முதல் முக்கியமான திருப்புமுனையாக மாறியது. இந்த ஓவரில் பும்ரா மூன்று ரன் மட்டுமே கொடுத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : நேற்று பாகிஸ்தானுக்கு எதிரா இந்திய அணி செய்த 4 சாதனை.. டி20 உ.கோ வரலாற்றில் முதல் முறை

இதற்கு அடுத்து சுழல் பந்துவீச்சாளருக்கு தர வேண்டிய ஒரு ஓவர் எஞ்சி இருந்தது. சூழ்நிலையை பயன்படுத்தி 16வது ஓவரை அக்சர் படேலுக்கு கேப்டன் ரோகித் சர்மா கொடுத்தார். அந்த ஓவரில் அக்சர் 2 ரன் மட்டுமே கொடுக்க, பாகிஸ்தான் அணிக்கு ரன் அழுத்தம் ஆரம்பித்தது. இது போட்டியில் முக்கியமான இரண்டாவது டர்னிங் பாயிண்டாக அமைந்தது. இந்த இரண்டு விஷயங்களும்தான் நேற்று இந்திய அணி வெல்வதற்கு பந்துவீச்சில் முக்கியமான காரணங்களாக இருந்தன,