நேற்று பாகிஸ்தானுக்கு எதிரா இந்திய அணி செய்த 4 சாதனை.. டி20 உ.கோ வரலாற்றில் முதல் முறை

0
2094
ICT

இந்திய அணி நேற்று டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அசாத்தியமான ஒரு வெற்றியை பெற்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. 119 ரன்கள் மட்டுமே எடுத்து பாகிஸ்தான் அணியை 113 ரன்களில் மடக்கி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி நான்கு குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்திருக்கிறது.

நேற்றைய போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சிறப்பாக ஆரம்பித்தாலும் கூட முடிவில் 119 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகிவிட்டது. ஆடுகளத்தை நம்பி சரியான டெஸ்ட் லென்த்தில் பந்து வீசிய பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியை சிறப்பாக மடக்கினார்கள்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணியை இந்திய பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கி எடுத்துச் சென்று, கடைசி 10 ஓவர்களில் மிகச் சிறப்பாக வைத்து சுருட்டி விட்டார்கள். பாகிஸ்தான அணி ஏழு விக்கெட் களை மட்டுமே இழந்து 20 ஓவர்கள் முழுமையாக விளையாடினால் கூட, அவர்களால் வெற்றிக்கான இலக்கை எட்ட முடியவில்லை.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலமாக டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஏழு முறை வெற்றி பெற்றிருக்கிறது. டி20 உலக கோப்பை வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக இன்னொரு அணி பெறும் அதிக வெற்றி இதுதான். இதற்கு முன்பாக இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும், பாகிஸ்தான அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும் டி20 உலகக் கோப்பையில் ஆறு முறை வெற்றி பெற்று இருக்கின்றன.

மேலும் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மிகக் குறைந்த ரன்களை டிபன்ட் போட்டியாகவும் இது அமைந்திருக்கிறது. இதற்கு முன்பாக இலங்கை அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக இதே போல் 119 ரன்கள் எடுத்து, பந்துவீச்சில் நியூசிலாந்து அணியை மடக்கி வெற்றி பெற்று இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : இவங்ககிட்ட இதுக்கு மேல எதிர்பார்க்க முடியாது.. எங்க தோல்விக்கு முக்கிய காரணமே இதுதான் – பாபர் அசாம் பேட்டி

மேலும் இந்திய அணிக்கு டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் மிகக் குறைந்த ரன்களை வைத்து வெற்றி பெற்ற போட்டியாகும். மேலும் பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட்டில் 119 ரன்களை துரத்த முடியாமல் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. அதற்கு அடுத்து இந்திய அணிக்கு எதிராக தற்பொழுது 120 ரன்கள் எடுக்க முடியாமல் தோல்வி அடைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.