ஒரு பந்துக்கு இரண்டு ரன் ; மீண்டும் கதாநாயகன் ஆனார் ஐந்து சிக்ஸர் ரிங்கு சிங்; பஞ்சாப்பை வீழ்த்தியது கொல்கத்தா!

0
470
Rinku

ஐபிஎல் 16ஆவது சீசனில் 53வது போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய பரபரப்பான போட்டி நடைபெற்றது!

டாசை வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்சிம்ரன் 12, ஷிகர் தவான் 57, ராஜபக்சே 0, லிவிங்ஸ்டன் 15, ஜிதேஷ் சர்மா 21, சாம் கரன் 4, ரிஷிதவான் 19, ஷாருக்கான் 21, அர்பிரித் பிரார் 19 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் வந்தது. கொல்கத்தா தரப்பில் வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்களுக்கு 26 ரன்கள் தந்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா அணிக்கு குர்பாஸ் 15, ஜேசன் ராய் 38, நிதிஷ் ரணா 51, வெங்கடேஷ் 11, ஆண்ட்ரே ரசல் 42, ரிங்கு சிங் 21 ரன்கள் எடுக்க கடைசி பந்தில் வெற்றி வந்தது. பஞ்சாப் தரப்பில் நான்கு ஓவர்கள் பந்துவீசி 23 ரன்கள் தந்து ராகுல் சகர் இரண்டு விக்கட்டுகள் வீழ்த்தினார்.

கடைசி இரண்டு ஓவர்களுக்கு 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில். ஆட்டத்தின் 19 ஆவது ஓவரை வீசிய சாம் கரன் மூன்று சிக்ஸர்களோடு 21 ரன்கள் தந்து ஆட்டத்தை அங்கேயே முடித்து விட்டார்.

இதற்கு அடுத்து கடைசி ஓவரில் வெற்றிக்கு ஆறு ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை வீசிய அர்ஸ்தீப் சிங் மிகச் சிறப்பாக பந்துவீசி, ரசலை கட்டுப்படுத்தியதோடு, அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் ரன் கொடுக்காமல் அவரை ரன் அவுட்டும் செய்தார்.

- Advertisement -

இதனால் கடைசி பந்தில் வெற்றிக்கு இரண்டு ரன் தேவைப்பட்டது. அப்பொழுது ரிங்கு சிங் பேட்டிங் முனையில் இருந்தார். லெக் சைட் ஃபீல்டிங் வைத்த அர்ஸ்தீப் பந்தை தவறுதலாக புல்டாஸ் ஆக கொடுக்க, அதை ரிங்கு சிங் பவுண்டரி அடித்து கொல்கத்தா அணியை வெல்ல வைத்தார்.

11 ஆட்டங்களில் பஞ்சாப் 10 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், 11 ஆட்டத்தில் 10 புள்ளிகள் உடன் கொல்கத்தா புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றன. பத்து போட்டிகளில் 10 புள்ளிகள் உடன் பெங்களூரு அணி ஐந்தாவது இடத்தில் தொடர்கிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் வென்று இருந்தால் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும். தற்பொழுது கொஞ்சம் குறைந்திருக்கிறது!