2 டக்.. பின்னணியில் விராட் கோலிக்கு 2 பிரச்சனைகள்.. டிராவிட்டுக்கும் கடைசியில் இதுதான் நடந்தது

0
100
Virat

இந்திய அணியின் விராட் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் அடுத்தடுத்து டக் அவுட் ஆனார். இதற்குப் பின்னணியில் இரண்டு முக்கிய பிரச்சினைகள் அவருடைய பேட்டிங்கில் இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவில் நடைபெற்ற இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பிறகு விராட் கோலி தற்போது தான் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பியிருக்கிறார். மேலும் அவர் லண்டனில் சிறப்பு பயிற்சி பெற்றாலும் கூட அவருக்கு போட்டி பயிற்சி இல்லாதது அவருடைய பேட்டிங் தடுமாற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

- Advertisement -

முதல் முக்கிய பிரச்சனை

விராட் கோலி வெளியில் செல்லும் பந்துகளை விளையாடுவதால் ஆட்டம் இழந்து கொண்டிருந்ததால் தற்போது அந்த பந்துகளை நேராகவும் எக்ஸ்ட்ரா கவரிலும் விளையாட முயற்சி செய்கிறார். இப்படி விளையாட பந்தின் லைனுக்கு மிக நேராக வந்து விளையாட வேண்டும். வெளியில் செல்லும் எல்லா பந்துகளுக்கும் இப்படி பந்தின் நேராக வர முடியாது.

அடுத்ததாக வெளியில் இருக்கும் பந்தை பொதுவாக டீப் பாயிண்ட் திசையில் விளையாடுவது சரியாக இருக்கும். ஆனால் விராட் கோலி வேறு இடத்தில் விளையாட விரும்புவதால் அவருக்கு பிரச்சனைகள் அதிகமாகிறது. டெக்னிக்கலாக இதை விராட் கோலி மாற்றிக்கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.

- Advertisement -

இரண்டாவது பிரச்சனை

ஒரு பேட்ஸ்மேன் வீசப்படும் பந்தின் லைன் மற்றும் லென்த்தை மிக வேகமாக யூகித்து அதற்கு ஏற்ற வகையில் மிக வேகமாக செயல்பட வேண்டும். இதற்கு உடலின் எல்லா பாகங்களும் செயல்படுகின்றன. அனிச்சை செயல் போல் மிக வேகமாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : 3வது ODI.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. கம்பீர் பிடிவாதத்தை கைவிடுவாரா?.. வொய்ட் வாஷில் இந்திய அணி தப்பிக்குமா?

இதில் விராட் கோலிக்கு தற்பொழுது அனிச்சை செயலின் வேகம் மிகவும் குறைவாக இருக்கிறது. ஒரு பந்துக்கு ரியாக்ட் செய்ய கொஞ்சம் தாமதம் செய்கிறார். அதன் காரணமாக இரண்டு போட்டிகளிலுமே அவர் ஆட்டம் இழந்து இருக்கிறார். கண்கள் மற்றும் கைகளின் ஒருங்கிணைவு வேகம் அவருக்கு குறைந்திருக்கிறது. இரண்டு பிரச்சனைகளையும் அவர்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். மேலும் ராகுல் டிராவிட் கிரிக்கெட் இறுதி காலத்தில் இதுவே நடைபெற்றது என தெரிவிக்கிறார்கள்.

- Advertisement -