இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை நடைபெற இருக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவன்? எவ்வாறு அமையலாம் என்று பார்க்கலாம்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளை தோற்று தொடரை இழந்து விட்டது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் முதல் போட்டியை வெல்ல இந்திய அணி கடுமையாக முயற்சி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
கம்பீர் பிடிவாதத்தை மாற்றுவாரா?
தற்போதைய இந்திய பிளேயிங் லெவனில் ஹர்ஷித் ராணா இடத்திற்கு குல்தீப் யாதவ் விளையாட வைக்கப்பட வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் கம்பீர் பிடிவாதமாக ஹர்ஷித் ராணாவை விளையாட வைக்கிறார். இது பவுலிங் யூனிட்டை பலவீனம் அடைய வைக்கிறது.
மேலும் நல்ல பேட்டிங் செய்யக்கூடிய ஆல் ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியை எட்டாவது இடத்தில் தொடர்ந்து களம் இறங்குகிறார். அவரை வாஷிங்டன் சுந்தருக்கு முன்பாக இறக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. இல்லையென்றால் இவரை நீக்கிவிட்டு நேரடியாக குல்தீப் யாதவை கொண்டு வர வேண்டும்.
பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு
ஒருவேளை பேட்டிங் வரிசை ஏழு வரையில் போதுமென்றால் ஹர்ஷித்,ராணா இடத்தில் பிரசித் கிருஷ்ணா, நிதீஷ் குமார் ரெட்டி இடத்தில் குல்தீப் யாதவ் இருவரும் விளையாட வைக்கப்பட வேண்டும். ஆனால் இதற்கு குறைந்த வாய்ப்புகளே இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
இதையும் படிங்க: 2 டக் அவுட்.. சோசியல் மீடியா ட்ரோல்.. விராட் கோலி இந்த முடிவை எடுக்க மாட்டார்னு நம்புறேன் – இர்ஃபான் பதான் பேட்டி
இந்திய பிளேயிங் லெவன்: கில், ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர், நிதீஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ்.






