இலங்கை கேப்டனை இப்பொழுதே வாங்க வாய்ப்பிருக்கும் இரண்டு ஐபிஎல் அணிகள்!

0
5220
IPL

இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது!

ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 2-1 என வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் இலங்கை அணியின் கேப்டன் சனகாவின் பேட்டிங் பெரிய அதிரடியாக இருந்தது.

இதற்கு அடுத்து துவங்கிய மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி மிக எளிதாக வெற்றி பெறுகின்ற நிலையில் இருந்த பொழுது. இலங்கை அணியின் கேப்டன் சனக ஒன்பதாவது விக்கெட்டுக்கு வந்தவரை வைத்துக்கொண்டு, மீண்டும் அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தினார்.

இந்திய ஆடுகளங்களில் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்யக்கூடிய திறமை இருந்தும் இவரை கடந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்திலும் இந்த ஆண்டு ஐபிஎல் மினி ஏலத்திலும் எந்த அணிகளும் வாங்கவில்லை. ஆனால் இவர் இந்த இரண்டு ஏலங்களுக்கு முன்பாகவும் மிகச் சிறப்பான அதிரடியை இந்தியாவில் வைத்து வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்திய ஆடுகளங்களில் தொடரும் இவரது அதிரடி பேட்டிங் பல ஐபிஎல் அணிகளை உற்று கவனிக்க செய்துள்ளது.

எந்த ஒரு தனிப்பட்ட வீரர்களும் காயமடையாமல் எந்த ஐபிஎல் அணியாவது இவரை வாங்க முடியுமா என்றால் தற்பொழுது இரண்டு அணிகள் அதற்கான வாய்ப்பில் இருக்கின்றன. எந்த அணிகள் அவருக்கு அந்த அணியில் என்ன வாய்ப்பு இருக்கும் என்பதை பார்ப்போம்.

பஞ்சாப் கிங்ஸ் :

பஞ்சாப் அணி எட்டு வெளிநாட்டு வீரர்களை வாங்க வேண்டிய இடத்திற்கு 7 வீரர்களை மட்டுமே வாங்கி உள்ளது. இதனால் தற்பொழுது பஞ்சாப் அணியால் இலங்கை அணியின் கேப்டன் சனகாவை வாங்க முடியும். இவரை கீழ் வரிசையில் ஒரு பினிஷர் ஆக இளம் வீரர்கள் ஜிதேஷ் சர்மா மற்றும் ஷாருக்கான் இவர்களுடன் விளையாட வைப்பதால், இவரது அனுபவத்தின் மூலம் கீழ் வரிசையில் ஒரு பேட்டி ஒருங்கிணைப்பும் சிறப்பான முடிப்பும் கிடைக்கும்.

குஜராத் டைட்டன்ஸ் :

குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் அணி போல் வெளிநாட்டு வீரர்களுக்கான எட்டு இடத்திற்கு ஏழு வீரர்களை மட்டுமே வாங்கி உள்ளது. இந்த அணியாலும் தற்பொழுது இவரை உடனடியாக வாங்க முடியும். இவரை வாங்குவதின் மூலம் ஒரு மிதவேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கிடைப்பார். ஹர்திக் பாண்டியா ஏதாவது காயம் அடைந்து விளையாட முடியாமல் போனால் அந்த இடத்திற்கு இவர் மிகவும் பொருத்தமான ஒரு வீரராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது!