ரெண்டு இந்திய பசங்க.. ஒருத்தர் சர்வதேச வீரர்களை விட டேலண்ட்.. இன்னொருத்தர் படு டேஞ்சர் – மெக்கலமே ஆச்சரியப்பட்டு புகழ்ந்த இந்திய இளம் வீரர்கள்!

0
7535
McCullum

தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட் உலகத்தில் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு தலைமை பயிற்சி ஆளராக இருக்கும் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கலம் அதிரடியான மாற்றங்களை கொண்டு வந்து, எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி ஜோ ரூட் தலைமையில் மிகவும் பின்னடைவை சந்தித்து வந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் மற்றும் புதிய தலைமை பயிற்சியாளராக பிரண்டன் மெக்கலம் இருவரையும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்ததும் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறை அதிரடியாக மொத்தமாக மாறியது. இன்று டெஸ்ட் கிரிக்கெட்டை சுவாரசியமான ஒன்றாக இவர்கள் மாற்றி இருக்கிறார்கள்.

- Advertisement -

மெக்கலம் இதற்கு முன்பாக ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்து ஒரு சீசனில் அந்த அணியை இறுதிப்போட்டிக்கு கூட்டிச் சென்றார். ஆனால் அவர் விரும்பியபடி எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதிரடியாக விளையாடக்கூடிய அணியை உருவாக்க முடியவில்லை.

இந்த நிலையில் அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக அழைப்பு விடுக்க அதை அப்படியே அவர் ஏற்றுக் கொண்டார். ஐபிஎல் தொடரில் செய்ய முடியாததை அவர் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்திருப்பது யாருமே எதிர்பார்க்காத ஒன்று.

இந்த நிலையில் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த பொழுது அதில் பார்த்த இரண்டு இளம் வீரர்கள் பற்றி அவர் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த இரண்டு வீரர்கள் சுப்மன் கில் மற்றும் ரிங்கு சிங்.

- Advertisement -

சுப்மன் கில் பற்றி கூறியுள்ள மெக்கலம்
“நான் மிகவும் ரசித்துப் பார்த்த ஒரு வீரர் சுப்மன் கில். அவர் சர்வதேச கிரிக்கெட் வீரர்களை விட அதிக திறமை கொண்ட ஒரு வீரர்!” என்று அவரை அருகில் இருந்து பார்த்தது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

இதற்கு அடுத்து ரிங்கு சிங் பற்றி கூறிய அவர் ” ரிங்கு சிங்கை பார்க்க மகிழ்ச்சியளிக்கிறது. அவர் எடுத்த முயற்சியை நான் பார்த்திருக்கிறேன். அவருக்கு இந்த நிலை ஒருபோதும் எளிதாக கிடைக்கவில்லை. அவர் இதற்காக கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. அவர் அடக்கமானவர் மற்றும் அருமையான டீம் மேன். அவருக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்.

அவர் சர்வதேச மட்டத்தில் விளையாடுவதற்கான திறமையை கொண்டிருக்கிறார். மேலும் அவர் ஸ்பெஷலான விஷயங்களை செய்ய முடியும். அவருக்கு என் நல்வாழ்த்துக்கள். அவர் சிறந்த குணம் கொண்ட நல்ல மனிதர். முக்கியமாக அவர் மிகத் திறமையானவர். அவருடைய இந்த கதையை உலகம் ரசிக்கும்!” என்று கூறியிருக்கிறார்!