விராட் கோலியின் ஹேஸ்டேகுக்குப் பின்னால் ஆடு எமோஜி இணைத்து கவுரவிதுள்ள ட்விட்டர் நிறுவனம்

0
571
Virat Kohli Goat Symbol in Twitter

விராட் கோலி இதுநாள் வரையில் அவருடைய கிரிக்கெட் கேரியரில் நிகழ்த்திய சாதனைகளை இந்த ஒரு கட்டுரையில் நாம் அடக்கிவிட முடியாது. அந்த அளவுக்கு கட்டுக்கடங்காத எண்ணிலடங்காத சாதனைகளை அவர் தனக்கு சொந்தமாக்கிக் கொண்டு உள்ளார். 50 ஓவர் மட்டும் 20 ஓவர் தொடர் போட்டிகளில் ஒரு கேப்டனாக அவரால் ஒரு ஐசிசி கோப்பையை இதுநாள் வரையில் கைப்பற்ற முடியவில்லை என்றாலும் ஒரு வீரராக மற்ற வீரர்கள் செய்ய முடியாத விஷயங்களை அவர் செய்து காட்டியிருக்கிறார். 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்பொழுது வரை இந்திய அணிக்காக அதிக ரன்கள் (டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ) குறித்த ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே.

இந்திய அணிக்கு டெஸ்ட் கேப்டனாக கடந்த ஆண்டுகளில் தன்னுடைய பணியை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். இவரது தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து ஐந்து வருடங்களாக நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக வலம் வந்தது பெருமைக்குரிய விஷயமாகும். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை ஏழு முறை இரட்டை சதங்களை விளாசி இருக்கிறார். இப்படி எத்தனையோ சாதனைகளை நாம் சொல்லிக் கொண்டே போகலாம் அவ்வளவு சாதனைகளை தனக்கு சொந்தம் கொண்டாடி ஒரு தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

டுவிட்டர் நிறுவனம் விராட் கோலி ரசிகர்களுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்

சர்வதேச அளவில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே. அவருக்கு அடுத்தபடியாக ரிக்கி பாண்டிங் 71சர்வதேச சதங்கள் குவித்துள்ளார். இவர்கள் இருவரைத் தொடர்ந்து விராட் கோலி 70 சர்வதேச சதங்கள் குவித்து 71 ஆவது சதத்தை நோக்கி காத்து கொண்டிருக்கிறார். இந்த ஒரு புள்ளிவிவரம் மூலமாகவே நமக்கு சுலபமாக தெரிந்துவிடும் விராட்கோலி தொடர்ச்சியாக எவ்வளவு சிறப்பாக விளையாடுவார் என்று.

மாடர்ன் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியை தலைசிறந்த வீரர் என்று சொன்னால் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. விளையாட்டு போட்டிகளை பொறுத்தவரையில், ஒரு தனிப்பட்ட விளையாட்டில் அனைத்து காலகட்டத்திற்கும் ஏற்ற சிறந்த வீரர் (கோட் 🐐) என்கிற பெயரை ஒருவர் பெறுவது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது.

ஆனால் தற்பொழுது விராட் கோலி அந்த அந்தஸ்தை ட்விட்டர் நிறுவனம் மூலமாக பெற்றிருக்கிறார். விராட் கோலி அனைத்து காலகட்டத்திற்கு ஏற்ற சிறந்த வீரர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும் பெற்ற நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அவருக்கு அந்த பட்டத்தை ஈமோஜி மூலமாக கொடுத்துள்ளது. அனைத்து காலகட்டத்திற்கு ஏற்ற சிறந்த வீரரை சுருக்கி செல்லமாக கோட் 🐐 என்று அனைவரும் அழைப்பார்கள்.

- Advertisement -

அவ்வாறு அழைக்கப்படும் வீரரின் பெயருக்குப் பின்னால் ரசிகர்கள் கோட் (🐐) ஈமோஜியை குறிப்பிட்டு பதிவிடுவார்கள். தற்பொழுது அந்த ஈமோஜியை விராட்கோலயின் ஹேஷ்டேக்கிற்கு பின்னால் ( #விராட்கோலி 🐐) டுவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இணைத்துள்ளது. ட்விட்டர் நிறுவனமே இவ்வாறு அதிகாரபூர்வமாக இணைத்த விஷயம் விராட் கோலியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்கள் அனைவரையும் தற்பொழுது பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.